இந்திய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் சென்னை பத்திரிகை தகவல் அலுவலகத்தின் சார்பில் மத்திய அரசின் திட்டங்கள் மற்றும் நிதிநிலை அறிக்கை பற்றிய ஊடகவியலாளருக்கான ஒரு நாள் பயிலரங்கம் திருவண்ணாமலையில் இன்று நடைபெற்றது. இந்த பயிலரங்கை சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம் மற்றும் மத்திய மக்கள் தொடர்பகத்தின் கூடுதல் தலைமை இயக்குநர் ம.அண்ணாதுரை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.
அப்போது பேசிய அவர், மக்களின் எல்லா தேவைகளுக்கும் அரசு திட்டங்கள் உள்ளதாகவும், சுதந்திரம் அடைந்த பிறகு மக்கள் நலம் சார்ந்த அரசாங்கம் அமைந்த பிறகு மக்கள் நலம் சார்ந்த. திட்டங்கள் கடைசியிலும் கடைசியாக உள்ள மக்களுக்கும் திட்டங்களை வகுத்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. அரசின் திட்டங்கள் மக்களுக்கு தெரியாமல் உள்ளது அரசின் திட்டங்களை மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும், அரசுக்கும் மக்களுக்கும் இடையே உள்ள இடைவெளியே நிரம்பும் வகையில் சேவை, பங்களிப்புடன் பத்திரிகையாளர்கள் செயல்பட வேண்டும் என்றார்.
திருமணங்கள் அதிக அளவில் நடைபெறுவதை தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் செயல்பட்டு வருவதாகவும், இவற்றை முழுமையாக தடுக்க பத்திரிகையாளர்களின் பங்களிப்பு தேவை என்று மாவட்ட குழந்தைகள் பாதுகப்பு அலுவலர் செல்வி பேசினார், சுகாதார பணிகள் துனை இயக்குநர் செல்வகுமார் மத்திய அரசு, சுகாதார துறையின் மூலம் செயல்படுத்தும் திட்டங்கள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்களுக்கும், குழந்தைகளுக்கும் வழங்கப்படும் சுகாதார திட்டங்கள் பற்றி பேசினார்.
விவசாயிகளுக்கு நவீன தொழில் நுட்பங்கள், புதிக ரகங்களை ஆராய்ச்சி செய்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்க மத்திய அரசு மாவட்டங்கள் தோறும் வேளாண்மை அறிவியல் மையங்களை அமைத்து வருவதாக வேலூர் வேளாண்மை அறிவியல் மையத்தின் மூத்த விஞ்ஞானியும், தலைவருமான திருமுருகன் தெரிவித்தார், கிராமபுற மக்களுக்கும் வங்கி சேவை சென்றடையும் வகையில் வங்கிகள் தோறும் வணிக தொடர்பாளர்கள் மூலம் மத்திய அரசின் திட்டங்களான பிரதமரின் காப்பீடு திட்டம், முத்ரா வங்கி கடன் திட்டங்களை செயல்படுத்தி வருவதாக மாவட்ட முன்னோடி வங்கியான இந்தியன் வங்கியின் மாவட்ட மேலாளர் கௌரி தெரிவித்தார்.
சென்னை பத்திரிகை தகவல் அலுவலகத்தின் இணை இயக்குநர் அருண்குமார் எளிமையான முறையில் சமூக வலைதளங்களில் உடனுக்குடன் செய்திகள் வந்தாலும் மக்களின் நம்பக தன்மையாக பத்திரிகைகள் உள்ளது என்றார். மத்திய ஒலிபரப்பு அமைச்சகத்தின் துனை இயக்குநர் ராஜீவ் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை பற்றி விளக்கி பேசினார், மத்திய நிதிநிலை அறிக்கையில் பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்திற்கும், இயற்கை விவசாயத்திற்கும் நிதி அதிக அளவில் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். பயிலரங்கில் பங்கேற்ற பத்திரிகையாளர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
முன்னதாக சென்னை பத்திரிகை தகவல் அலுவலகத்தின் துணை இயக்குநர் விஜய லட்சுமி அனைவரையும் வரவேற்றார், முடிவில் மத்திய மக்கள் தொடர்பகத்தின் தொழில்நுட்ப உதவியாளர் முரளி நன்றி கூறினார்.
- அ.மு.முஸ்தாக் அகமத், மாவட்ட செய்தியாளர், திருவண்ணாமலை.
No comments:
Post a Comment