செய்யாறு அரசு மாதிரி மகளிர் பள்ளியில் முப்பெரும் விழா. பெண்களின் உரிமையும், கல்வியும் திராவிட மாடல் ஆட்சியில் தான் முன்னேற்றம் காண்கிறது. அமைச்சர் எ.வ.வேலு பெருமிதம். - தமிழக குரல் - திருவண்ணாமலை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 2 August 2024

செய்யாறு அரசு மாதிரி மகளிர் பள்ளியில் முப்பெரும் விழா. பெண்களின் உரிமையும், கல்வியும் திராவிட மாடல் ஆட்சியில் தான் முன்னேற்றம் காண்கிறது. அமைச்சர் எ.வ.வேலு பெருமிதம்.


திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அரசு மாதிரி மகளிர் மேல்நிலை பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி ரூ.10 லட்சத்தில் கட்டப்பட்ட கலையரங்கம் மேடை திறப்பு விழா,மாணவர்களுக்கு சீருடை மற்றும் சைக்கிள் வழங்கும் விழா, மாவட்டம் முழுவதும் தொடக்க கல்வி ஆசிரியர்களுக்கு கையடக்க கணிணி வழங்கும் விழா என முப்பெரும் விழா 01/8/24 அன்று நடந்தது. நிகழ்ச்சிக்கு திருவண்ணாமலை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். 

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேஷமூர்த்தி வரவேற்றார். மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, சப்-கலெக்டர் பல்லவி வர்மா,ஆரணி எம்பி தரணிவேந்தன், செய்யாறு எம்எல்ஏ ஜோதி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனுவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு விருந்தினராக பொதுப்பணித் துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு பங்கேற்று மாவட்டம் முழுவதும் உள்ள 3178 ஆசிரியர்களுக்கு கையடக்க கணிணி மற்றும் ரூ.10.32 கோடி மதிப்பில் 21,639 மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கி பேசியதாவது, கல்வி அறிவு பெருகிட திருவள்ளுர் வழியில் திராவிட மாடல் ஆட்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அரும்பாடு பட்டு வருகிறார்.                        


செய்யாறு அரசு மகளீர் மாதிரி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் உமாமகேஸ்வரி,ஆண்கள் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயகாந்தன் ஆகியோர் பள்ளியை சிறந்த முறையில் பராமரித்ததற்காக. தமிழக அரசு தலா ரூ.10 லட்சம் வழங்கியுள்ளது. இது மாவட்டத்திற்கு பெருமை தான், திருவண்ணாமலை மாவட்டம் பல துறைகளில் சிறப்பாக முதலிடம் பெற்று வருவதாக ஆரணி எம்பி தரணிவேந்தனும்,செய்யாறு எம்எல்ஏ ஜோதியும் பெருமையாக குறிப்பிட்டார்கள் என்பது உண்மை தான்.ஆனால் கல்வியில் நமது மாவட்டம் பின் தங்கியுள்ளது என் மனதில் காயத்தை ஏற்படுத்தியுள்ளது.         


மறைந்த முதல்வர் கருணாநிதி பெண் கல்வி வளர்ச்சிக்காக பல திட்டங்களை செயல்படுத்தியதோடு பெண்களுக்கு சொத்தில் பங்கு உண்டு என நாட்டிற்கே முன்னோடியாக சட்டத்தினை செயல்படுத்தினார். அதிலும் ஒரு படி மேலாக தமிழக அரசின் புதுமை பெண் திட்டம் பெண்களின் உயர் கல்விக்கு ஊக்குவிப்பதாக உள்ளது. 10 ஆண்டுகளுக்கு மேலாக பள்ளிக் கல்வியில் கூட முதல் இரு இடங்களை பெண்கள் விடாமல் பிடித்து வருகிறார்கள். ஆண்கள் 3வது இடம் பிடிப்பதற்கே திண்டாடி வருகிறார்கள். தொடக்க கல்வியில் கம்யூட்டர் அதிக உதவியாக இருக்கும் என்று யோசித்த முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆசிரியர்களுக்கு மடிக்கணிணி வழங்கி வருகிறார். இவ்வாறு அவர் பேசினார்.                                      


- அ.மு. முஸ்தாக் அகமத், மாவட்ட செய்தியாளர், திருவண்ணாமலை

No comments:

Post a Comment

Post Top Ad