திருவண்ணாமலை மாவட்டத்தில் கலைஞரின் கனவு இல்லம் உள்ளிட்ட திட்டங்களை தனி கவனத்துடன் செயல்படுத்த வேண்டும். ஆய்வு கூட்டத்தில் கலெக்டர் உத்தரவு. - தமிழக குரல் - திருவண்ணாமலை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday 4 August 2024

திருவண்ணாமலை மாவட்டத்தில் கலைஞரின் கனவு இல்லம் உள்ளிட்ட திட்டங்களை தனி கவனத்துடன் செயல்படுத்த வேண்டும். ஆய்வு கூட்டத்தில் கலெக்டர் உத்தரவு.


திருவண்ணைமலை மாவட்டத்தில் கலைஞர் கனவு இல்லம் உள்ளிட்ட திட்டங்களை தனி கவனத்துடன் அதிகாரிகள் செயல்படுத்த வேண்டும் என கலெக்டர் தெரிவித்தார். திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை சார்பில் செயல்படுத்தப்படும் அரசு திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடந்தது.

அதில் ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் நீலமேகம்,உதவி திட்ட அலுவலர்கள் அருண்,மகாலட்சுமி மற்றும் 18 ஒன்றியங்களில் பணி புரியும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொறியாளர்கள் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். கூட்டத்தில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தாவது:-மக்களின் நலனை மேம்படுத்த அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது. அந்த திட்டங்களை மக்களிடம் சேர்க்க வேண்டிய கடமை அதிகாரிகளிடம் உள்ளது. எனவே அந்த கடமையை உணர்ந்து அனைத்து அதிகாரிகளும் செயல்பட வேண்டும்.          


வீடு இல்லாத ஏழை எளிய மக்கள் பாதுகாப்பாக வசிக்க வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு அரசு சார்பில் கலைஞரின் கனவு இல்லம் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. முதற்கட்டமாக 2024-25 ம் ஆண்டில் ஒவ்வொரு ஒன்றியத்துக்கும் வீடுகள் ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன. கிராமங்களில் உள்ள குடிசைகளை மாற்றி அனைவருக்கும் பாதுகாப்பான கான்கிரீட் வீடுகளை அமைத்து தருவது இத்திட்டத்தின் நோக்கம். குடிசையில் வசிப்பவர்கள், சேதமேடைந்த வீடுகளில் வசிப்பவர்கள், பட்டா இருந்தும் சொந்தமாக வீடு இல்லாதவர்கள் என ஏழை எளிய மக்களை கண்டறிந்து பாதுகாப்பான வீடுகள் கட்டித் தர அரசு அக்கறை கொண்டிருக்கிறது. 


எனவே கலைஞரின் கனவு இல்லம் உள்ளிட்ட அரசின் திட்டங்களை செயல்படுத்துவதில் அதிகாரிகள் தனி கவனம் செலுத்த வேண்டும். ஒன்றிய பொறியாளர், பணி மேற்பார்வையாளர் ஆகியோர் களத்துக்கு சென்று பணிகளை உடனுக்குடன் கண்காணித்து, தேக்கமின்றி குறித்த காலத்தில் பணிகள் முடிந்திருக்கின்றதா என ஆய்வு செய்ய வேண்டும், தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கு உரிய காலத்திற்குள் திட்டம் சென்று சேர்ந்திருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் .ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடைய அனைவரும் பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.                                   


- அ.மு. முஸ்தாக் அகமத்,மாவட்ட செய்தியாளர்,திருவண்ணாமலை.

No comments:

Post a Comment

Post Top Ad