திருவண்ணாமலையில் உள்ள விக்னேஷ் பாலிடெக்னிக் கல்லூரியில் சைபர் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. - தமிழக குரல் - திருவண்ணாமலை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 2 August 2024

திருவண்ணாமலையில் உள்ள விக்னேஷ் பாலிடெக்னிக் கல்லூரியில் சைபர் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

 

திருவண்ணாமலையில் உள்ள விக்னேஷ் பாலிடெக்னிக் கல்லூரியில் Innovative Ideas to Prevent and Fight Cyber Crime என்ற தலைப்பில் சைபர் கிரைம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கி. கார்த்திகேயன் அவர்கள் அறிவுறுத்தலின்படி, சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் M.பழனி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு Innovative Ideas to Prevent and Fight Cyber Crime 616 தலைப்பில் இணையவழியில் மோசடி நபர்களால் ஏற்படுத்தப்படும் குற்றங்களில் இருந்து பாதுகாப்பாக இருப்பது குறித்து மாணவ மாணவியர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இதில் OTP-யை யாரிடமும் பகிர வேண்டாம். ஆன்லைனில் முதலீடு செய்து பணத்தை இழக்க வேண்டாம், சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பகிர வேண்டாம். சமீப காலமாக நடைபெற்று வரும் Online Job Frauds, Online Investment Frauds, Fedex Scam, Artificial Inteligence தொழில் நுட்பங்களை பயன்படுத்தி நடைபெற்று வரும் குற்றங்கள், அதனை தவிற்கும் வழிமுறைகளையும், பாதுகாப்பாக இணையத்தை பயன்படுத்துமாறும் அறிவுரைகள் வழங்கினார். மேலும் சைபர் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் மாணவ மாணவிகளுக்கு வழங்கப்பட்டது. மாணவர்கள் படிக்கும் பருவத்தில் நல்ல ஒழுக்கத்தை கடைப்பிடித்து, படித்து முன்னேற வேண்டும் 61601 அறிவுரைகள் வழங்கினார்.


மேலும் இணையவழி பணமோசடி புகார் எண் 1930, சைபர் கிரைம் குற்ற இணையதள முகவரி cybercrime.gov.in ஆகியவை குறித்து மாணவர்க ளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்நிகழ்ச்சியில் காவல் ஆய்வாளர் R.கவிதா, சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் R.மணிமாறன், சைபர் கிரைம் காவலர்கள் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad