ஜவ்வாதுமலை பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை சுற்றுலாத்துறை அமைச்சர் ஆய்வு. - தமிழக குரல் - திருவண்ணாமலை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday 18 August 2024

ஜவ்வாதுமலை பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை சுற்றுலாத்துறை அமைச்சர் ஆய்வு.


திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலை பலாமரத்தூர் பகுதியில் சுற்றுலாத் துறை சார்பில் கட்டப்பட்டு வரும் சாகச சுற்றுலா கட்டிடங்கள்,கோலப்பன் ஏரியை சுற்றுலாத் துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து அமைச்சர் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையின் படி ஜவ்வாது மலை பகுதியில் சுற்றுலா துறை சார்பில் 22 பணிகள் நடைபெற்று வருகின்றன. 


இந்த நிதியாண்டில் அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து துறைகள் சார்பில் நடைபெறும் அனைத்து பணிகளையும் முழுமையாக முடிக்க வேண்டும் என உத்திரவிட்டுள்ளார். அதனை கொண்டு சுற்றுலாத் துறை சார்பில் நடைபெற்று வரும் பணிகளை துறைவாரியாக ஆய்வு செய்து விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது.                      


திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலை பகுதியில் ரூ.2.91 கோடி மதிப்பிட்டீல் சாகச சுற்றுலா கட்டிடம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. சாகச சுற்றுலா வளர்ச்சி பணி 8 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட உள்ளது. இப்பகுதியை சுற்றிலும் தடுப்புசுவர்கள் அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது. மேலும் வாகனம் நிறுத்தம் இடம்,நுழைவு வாயில், உணவகம், நிர்வாக அலுவலகம், கழிப்பறை போன்ற பணிகளும் இப்பகுதியில் நடந்து வருகிறது.                        


ஒப்பந்ததாரர்களிடம் விரைவில் பணிகளை முடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்திற்கு வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலத்திலிருந்து வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.தமிழகம் முழுவதும் சுற்றுலாத் துறை சார்பாக பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. இது தவிர சுற்றுலாத் துறை சார்பாக அமைக்கப்பட்டுள்ள உணவகங்கள், விடுதிகள் மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


அதனை தொடர்ந்து கோவிலூர் கோலப்பன் ஏரியில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து துறையை சார்ந்த அலுவலர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார். இதில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலர் ரா.ராம்பிரதீபன், எம்எல்ஏ.க்கள் பெ.சு.தி.சரவணன், மு.பெ.கிரி, சுற்றுலா அலுவலர் சு.கார்த்தி, ஒன்றிய குழு தலைவர் எம். ஜீவாமூர்த்தி, ஒன்றிய குழு துணை தலைவர் செ.மகேஸ்வரி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செந்தில்குமார், கா.வேணுகோபால், தாசில்தார் மனோகரன், ஊராட்சி மன்ற தலைவர் நடேசன் உள்பட பலர் கலந்துக் கொண்டனர்.                   


- அ.மு. முஸ்தாக் அகமத்,மாவட்ட செய்தியாளர்,திருவண்ணாமலை

No comments:

Post a Comment

Post Top Ad