விமானங்களின் விற்பனை, ஏற்றுமதி மற்றும் இறக்குமதி ஆகியவை இந்தியாவின் தேசிய நலன் மற்றும் வர்த்தக பலன் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு செயல்படுத்த வேண்டும். விமானங்களின் தகுதி, பயணிகளின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பில் ஈடுபடும் விமான குழுவினரின் திறன்கள் ஆகியவற்றை இந்த மசோதா தெளிவாக குறிப்பிடவில்லை. மேலும் விமான விபத்து, நேரக் கட்டுப்பாடு விசாரணை மற்றும் அதன் பின் ஏற்பாடு இழப்பீடுகளுக்கான வழிமுறைகளை தெளிவாக இந்த மசோதா குறிப்பிடவில்லை. விமான பயணிகள் பயண டிக்கெட் பெறும் போது விமானம் தயாரிக்கப்பட்ட ஆண்டு, பறக்கும் நேரம், பயண தூரம் மற்றும் போர்டிங் நேரம் பற்றிய தகவல்களை அந்தந்த பிராந்திய மொழிகளில் தெளிவாக குறிப்பிட வேண்டும்.
பனி மூட்ட காலத்தில் மென்மையாக தரையிறங்குவதற்கும்,புறப்படுவதற்கும் அனைத்து விமானங்களுடனும் உயர் அடர்த்தி (டிஒஎப்) கேமரா சென்சார் பொருத்தப்பட்டிருப்பது அவசியம். தனியார் விமான நிறுவனங்களின் லாபம் ஈட்டும் செயல்பாடுகளை கண்காணித்து முறைப்படுத்த வேண்டும். தமிழ்நாட்டிற்கு உள்நாடு மற்றும் வெளிநாடு விமான சேவைகளை அதிகரிக்கவும்,அதற்கான உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் சிவில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் வெளிநாடுகளில் இருந்து மற்றும் வெளி மாநிலங்களிலிருந்தும் புகழ்பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலை தரிசனம் செய்ய ஆந்திர மாநிலத்திலிருந்து அதிகப்படியான பக்தர்கள் வருகின்றனர். எனவே அவர்களின் வசதிக்காக திருவண்ணாமலை பகுதியில் விமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- அ.மு. முஸ்தாக் அகமத், மாவட்ட செய்தியாளர், திருவண்ணாமலை.
No comments:
Post a Comment