திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள ஆயுதப்படை மைதானத்தில் 15-8-24 அன்று நடைபெற்ற 78வது சுதந்திர விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் அவர்கள் தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி திறந்தவெளி வாகனத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் கே.பிரபாகர்,இ.கா.ப. அவர்களுடன் காவல் துறையினரின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
சமாதானத்தை குறிக்கும் வகையில் வெண் புறாக்களை மற்றும் பலூன்களை பறக்கவிட்டு தியாகிகளுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார். தேசப்பற்று விளக்கும் வகையில் சுதந்திர தின விழாவில் நடைபெற்ற பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சியினை கலெக்டர் பார்வையிட்டார். பல்வேறு துறைகளின் சார்பாக 391 பயனாளிகளுக்கு ரூ. 6 கோடியே 46 லட்சம் 72 ஆயிரத்து 712 மதிப்பிலான அரசு நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் கே.பிரபாகர், இ.கா.ப.,மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் மு.பிரியதர்ஷினி, திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) மணி, திட்ட இய்க்குநர் (மகளிர் திட்டம்) சரண்யாதேவி, செய்யார் சார் ஆட்சியர் பல்லவி வர்மா,வருவாய் கோட்டாட்சியர்கள் மந்தாகினி, பாலசுப்பிரமணியன், அரசு உயர் அதிகாரிகள் பணியாளர்கள், பயனாளிகள் மற்றும் பொது மக்கள் கலந்துக் கொண்டனர்.
- அ.மு. முஸ்தாக் அகமத்,மாவட்ட செய்தியாளர், திருவண்ணாமலை.
No comments:
Post a Comment