திருவண்ணாமலை எஸ்பி அலுவலகத்தில் வாராந்திர சிறப்பு குறை தீர்வு முகாம். - தமிழக குரல் - திருவண்ணாமலை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 1 August 2024

திருவண்ணாமலை எஸ்பி அலுவலகத்தில் வாராந்திர சிறப்பு குறை தீர்வு முகாம்.


திருவண்ணாமலை எஸ்பி அலுவலகத்தில் வாரந்தோறும் புதன்கிழமையன்று சிறப்பு குறை தீர்வு கூட்டம் நடக்கிறது. போலீஸ் ஸ்டேஷன்களில் தீர்வு கிடைக்காத பொது மக்கள் இக்கூட்டத்தில் மனு அளித்து பயன் பெறுகின்றனர், அதன்படி திருவண்ணாமலை எஸ்பி அலுவலகத்தில் சிறப்பு குறை தீர்வு முகாம் 31/7/24 அன்று சைபர் கிரைம் கூடுதல் எஸ்பி பழனி தலைமையில் நடந்தது. அதில் டிஎஸ்பிக்கள் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர். முகாமில் 37 மனுக்கள் பெறப்பட்டன.

அதில் பெரும்பாலான மனுக்கள் குடும்ப பிரச்சினை மற்றும் பாகப் பிரிவினை சொத்து தகராறு குறித்து அளிக்கப்பட்டன. எனவே இது போன்ற சிவில் வழக்குகள் தொடர்பான மனுக்களுக்கு நீதிமன்றம் மூலம் தீர்வு காண கூடுதல் எஸ்பி அறிவுறுத்தினார், மேலும் கலசப்பாக்கத்தைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட நபர்கள் ஏலச்சீட்டு நடத்தியவர்களிடம் பணத்தை இழந்ததாகவும் அதனை மீட்டு தர வேண்டி மனு அளித்தனர். இது தொடர்பாக புகார் மனு ஏற்கனவே பெறப்பட்டு மாவட்ட பொருளாதார  குற்றப் பிரிவில் விசாரணை நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.


மேலும் வழக்கு விசாரணை நடந்து வருவதால் விரைவில் தீர்வு காணப்படும் என தெரிவித்தனர், மேலும் போளூர் பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவர் கடனை செலுத்திய பிறகும் பத்திரத்தை திருப்பி தராமல் சிலர் அலைக்கழிப்பதாக தெரிவித்தார். இது தொடர்பாக விசாரணை நடத்த கூடுதல் எஸ்பி உத்திரவிட்டார்.                    


- அ.மு.முஸ்தாக் அகமத், மாவட்ட செய்தியாளர், திருவண்ணாமலை.

No comments:

Post a Comment

Post Top Ad