கீழ்பெண்ணாத்தூர் அருகே சிறுமியிடம் பாலியல் துண்புறுத்தலில் ஈடுபட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூபாய்.2,000/- அபராதம் விதிப்பு. - தமிழக குரல் - திருவண்ணாமலை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 5 August 2024

கீழ்பெண்ணாத்தூர் அருகே சிறுமியிடம் பாலியல் துண்புறுத்தலில் ஈடுபட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூபாய்.2,000/- அபராதம் விதிப்பு.


கடந்த 19.05.2020-ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டம். கீழ்பெண்ணாத்தூர் வட்டம், கீக்கலூர் கிராமத்தை சேர்ந்த கட்டையன் ஜெயபால் வ/43, த/பெ ரத்தினவேல் என்பவர் சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட குற்றத்திற்காக அப்போதைய கீழ்பெண்ணாத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் மகாலட்சுமி அவர்கள் வழக்குபதிவு செய்து ஜெயபால் என்பவரை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். 


அந்த வழக்கு திருவண்ணாமலை POCSO நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இன்று (05.08.2024) நீதிபதி அவர்கள் குற்றவாளி ஜெயபால் என்பவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூபாய்.2,000/- அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளார். அதன் பேரில் ஜெயபால் என்பவரை வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad