சோமாசிபாடி அண்ணாமலை மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளியில் சைபர் கிரைம் விழிப்புணர்வு. - தமிழக குரல் - திருவண்ணாமலை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 29 July 2024

சோமாசிபாடி அண்ணாமலை மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளியில் சைபர் கிரைம் விழிப்புணர்வு.


திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன், இ.கா.ப.அவர்கள் அறிவுறுத்தலின் படி, சைபர் கிரைம் மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் திரு.பழனி அவர்கள் மேற்பார்வையில் சோமாசிபாடி, அண்ணாமலை மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளியில் 29/7/24 அன்று மாணவ மாணவியர்களிடையே சைபர் கிரைம் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 

இதில் ஆய்வாளர் அவர்கள் OTP- ஐ யாரிடமும் பகிர வேண்டாம், ஆன்லைனில் முதலீடு செய்து பணத்தை இழந்து விடவேண்டாம், சமூக உபகரணங்களில் புகைப்படங்களை பகிர வேண்டாம், சமீப காலமாக நடைபெற்று வரும் Online job frauds,online investment frauds, fedex scam, artificial intelligence தொழில் நுட்பங்களை பயன்படுத்தி நடைபெறும் குற்றங்கள், அதனை தவிர்க்கும் வழிமுறைகளையும், பாதுகாப்பாக இணையத்தை பயன்படுத்துமாறும் அறிவுரைகளை வழங்கினார்.


மேலும் இணையவழி பண மோசடி புகார் எண் 1930, கிரைம் குற்ற இணைய தள முகவரி cybercrime.gov.in ஆகியவை குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் இணைய வழி குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.


- அ.மு. முஸ்தாக் அகமத்,மாவட்ட செய்தியாளர்,திருவண்ணாமலை.

No comments:

Post a Comment

Post Top Ad