அப்போது இந்த திட்டத்திற்கு பிரதமர் மன்மோகன் சிங் ரூ.600/- கோடி நிதி ஒதுக்கீடு செய்தார். இதில் வந்தவாசி, செய்யாறு, ஆரணி தாலுகாவில் 33 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு ரூ.196 கோடி வழங்கப்பட்டு ரயில் பாதைக்காக நிலம் கையகப்படுத்தப்பட்டது. மேலும் அரசுக்கு சொந்தமான ஆற்று படுக்கைகளில் உயர் மட்ட பாலம் அமைக்கப்பட்டுள்ளது, இந்த திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து பாதை அமைக்க அரசு முன் வர வேண்டும். அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாக அரசுக்கு நிலம் வழங்கிய விவசாயிகள் ரயில் வந்தால் சந்தோஷம் அடைவார்கள்.
ரயிலும் இல்லாமல் விவசாயமும் செய்ய முடியாமல் உள்ளதால் அரசு உடனடியாக கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து ரயில் பாதை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மன்னார்குடியில் இருந்து திருப்பதிக்கும் ராமேஸ்வரத்திலிருந்து திருப்பதிக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் விழுப்புரம் திருவண்ணாமலை ஆரணி வேலூர், அரக்கோணம் வழியாக திருப்பதி செல்கின்றது.
இந்த 2 எக்ஸ்பிரஸ் ரயில்களும் பட்டுக்கு பெயர் போன ஆரணி ரோடு ரயில் நிலையத்தில் நின்று செல்ல ரயில்வே அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்டு நெல் அரிசி வியாபாரிகள் அதிக அளவில் பயன்படுத்தும் இந்த ரயில் போக்குவரத்தை மேலும் மேம்படுத்த ஆரணி ரோடு ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். புகழ் பெற்ற செஞ்சி ராஜா தேசிங்கு கோட்டை மலை மீது உள்ளன. ராஜா ராணி கோட்டையை பார்க்க ஏராளமான சுற்றுலா பயணிகள் செஞ்சி மலை பகுதிக்கு வருவதால் அங்கு தொல்லியல் துறையினர் தங்கு தடையின்றி சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்க ரோப் கார் வசதி ஏற்படுத்த தொல்லியல் துறை அனுமதி அளிக்க வேண்டும், இவ்வாறு அவர் பேசினார்.
- அ.மு. முஸ்தாக் அகமத்,மாவட்ட செய்தியாளர்,திருவண்ணாமலை.
No comments:
Post a Comment