மது விலக்கு வழக்குகளில் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பொது ஏலம் விடப்பட்டது. - தமிழக குரல் - திருவண்ணாமலை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 26 July 2024

மது விலக்கு வழக்குகளில் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பொது ஏலம் விடப்பட்டது.


திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன், இ.கா.ப. அவர்களின் வழிகாட்டுதல் படி,கடந்த 1 வருடத்திற்கு முன்பு திருவண்ணாமலை மாவட்ட காவல் துறையினரால் மாவட்டம் முழுவதும் பல்வேறு வகையான மது விலக்கு வழக்குகளில் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 

பறிமுதல் செய்யப்பட்ட அவ்வாகனங்களின் பொது ஏலம் 25/7/24 அன்று திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பார் (பொறுப்பு திருவண்ணாமலை மாவட்டம்) திரு.ஆல்பர்ட் ஜான்,இ.கா.ப. அவர்களின்தலைமையில், சைபர் கிரைம் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.எம். பழனி அவர்கள் முன்னிலையில் திருவண்ணாமலை மாவட்ட ஆயுதப் படை மைதானத்தில் நடைபெற்றது. 


இதில் பல்வேறு ஊர்களிலிருந்து பொது மக்கள் பலர் கலந்துக் கொண்டனர். இதில் இரு சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் ஆட்டோக்கள் என மொத்தம் 64 வாகனங்கள் பொது ஏலத்திற்கு வைக்கப்பட்டிருந்த நிலையில் 50 வாகனங்கள் ரூ.15,67,000/- மதிப்பில் ஏலம் விடப்பட்டு, பொது மக்கள் வாங்கி சென்றனர். இதில் திருவண்ணாமலை மது விலக்கு காவல் துணை கண்காணிப்பாளர் எஸ்.ரமேஷ்ராஜ், மோட்டார் வாகன ஆய்வாளர் பெரியசாமி, தானியங்கி பொறியாளர் பழனிவேல் ஆகியோர் உடனிருந்தனர்.


- அ.மு. முஸ்தாக் அகமத்,மாவட்ட செய்தியாளர்,திருவண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad