திருவண்ணாமலை கிரிவலப் பாதையை சுற்றியுள்ள குளங்களை அளவீடு செய்தல், ஆக்கிரமிப்புகள் குறித்து கலெக்டர் ஆய்வு. - தமிழக குரல் - திருவண்ணாமலை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 26 July 2024

திருவண்ணாமலை கிரிவலப் பாதையை சுற்றியுள்ள குளங்களை அளவீடு செய்தல், ஆக்கிரமிப்புகள் குறித்து கலெக்டர் ஆய்வு.


திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கிரிவலப் பாதையை சுற்றியுள்ள வருவாய்துறை, ஊரக வளர்ச்சித் துறை, நகராட்சி நிர்வாகம், இந்து சமய அறநிலையத்துறை, வனத்துறை உள்ளிட்ட அரசு துறைகளின் கட்டுப்பாட்டில் உள்ள குளங்களை பாதுகாக்கும் வகையில் அதன் சுற்றளவை அளவீடு செய்தல் மற்றும் ஆக்கிரமிப்புகள் குறித்து கலெக்டர் பாஸ்கர பாண்டியன் 25-7-24 அன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

அப்போது கிரிவலப் பாதையை சுற்றியுள்ள சூரிய குளம்,நிருதி தீர்த்தம், கிருஷ்ணகுளம், சோமாவாரி தீர்த்தம் ஆகிய குளங்களையும், மலை அடிவாரத்தில் அக்னிலிங்கம் மற்றும் பச்சையம்மன் கோவில் அருகில் உள்ள பகுதிகளின் ஆக்கிரமிப்புகள் குறித்தும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.                              


ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, RDO மந்தாகினி, தாசில்தார் மு.தியாகராஜன், வட்ட துணை ஆய்வாளர் (நில அளவை பதிவேடுகள் துறை) பெ.தரணிவாசன் மற்றும் அரசு துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.                             


- அ.மு. முஸ்தாக் அகமத்,மாவட்ட செய்தியாளர், திருவண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad