திருவண்ணாமலை வேங்கிக்கால் ஊராட்சி பகுதியில் ஆவின் பால் குளிருட்டும் நிலையம் அருகே இந்து சமய அறநிலையத் துறை மண்டல இணை ஆணையர் அலுவலகம் ரூ.3 கோடி மதிப்பில் கட்டப்படுகிறது. இப்பணியை முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார், கடந்த 4 ஆண்டுகளாக திருவண்ணாமலை காந்தி நகர் வாடகை கட்டிடத்தில் இயங்கிவரும் மண்டல இணை ஆணையர் அலுவலகம், புதிய கட்டிட கட்டுமான பணி முடிந்த பிறகு சொந்த கட்டிடத்திற்கு இடம் மாறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இப்பணிகள் அளைத்தும் வரும் மார்ச் மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் மாநில தடகளச் சங்க துணைத் தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், அண்ணாமலையார் கோவில் இணை ஆணையர் ஜோதி, மண்டல இணை ஆணையர் சுதர்ஷன், நகராட்சித் தலைவர் நிர்மலா வேல்மாறன், ஒன்றிய குழு தலைவர் கலைவாணி கலைமணி, அறங்காவலர்கள் ராஜாராம், மற்றும் பலர் கலந்துக் கொண்டனர்.
- அ.மு. முஸ்தாக் அகமத்,மாவட்ட செய்தியாளர்,திருவண்ணாமலை.
No comments:
Post a Comment