திருவண்ணாமலை அடுத்த சேரியந்தலில் நடந்த மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாமில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடனுதவி. துணை சபாநாயகர், கலெக்டர் வழங்கினர். - தமிழக குரல் - திருவண்ணாமலை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday 17 July 2024

திருவண்ணாமலை அடுத்த சேரியந்தலில் நடந்த மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாமில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடனுதவி. துணை சபாநாயகர், கலெக்டர் வழங்கினர்.


திருவண்ணாமலை அருகே சேரியந்தல் ஊராட்சியில் நடந்த மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாமில்,மகளிர் குழுக்களுக்கு கடனுதவியை துணை சபாநாயகர் மற்றும் கலெக்டர் ஆகியோர் வழங்கினர், தமிழக அரசின் திட்டப் பயன்கள் நேரடியாக மக்களுக்கு எளிதில் சென்றடைய வசதியாக மக்களுடன் முதல்வர் எனும் சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் இரண்டாம் கட்டமாக, ஊரக பகுதிகளில் சிறப்பு முகாம்கள் கடந்த 11ந்தேதி தொடங்கியது.                  


அதன்படி,திருவண்ணாமலை மாவட்டத்தில் வரும் செப்டம்பர் 5ந் தேதி வரை மொத்தமுள்ள 860 கிராம ஊராட்சிகளை ஒருங்கிணைத்து 124 சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டு முகாம் நடத்தும் அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த சிறப்பு முகாம்களில் ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்துறை, மின் துறை, சமூக நலத் துறை உள்ளிட்ட 15 துறைகளை ஒருங்கிணைத்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 


சம்பந்தப்பட்ட துறைகளின் அலுவலர்கள் முகாமில் பங்கேற்று மனுக்களை பெறுகின்றனர். அதோடு இசேவை மையம் மூலம் ஒவ்வொரு மனுவும் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டு ஒப்புகை ரசீது வழங்கப்படுகிறது, இந்நிலையில் திருவண்ணாமலை புதிய பை-பாஸ் சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் 16/7/24 அன்று சேரியந்தல், கிளிப்பட்டு, வள்ளிவாகை, களஸ்தம்பாடி, சாணானந்தல், குன்னியந்தல் ஆகிய ஊராட்சிகளுக்கான மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் நடந்தது. அதில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆகியோர் கலந்துக்கொண்டு முகாமை பார்வையிட்டனர். 


மேலும் முகாமில் அளிக்கப்பட்ட மனுக்கள் உடனுக்குடன் பரிசீலனை செய்யப்பட்டது. அதன்படி 6 மகளிர் குழுக்களுக்கு கடனுதவி,பட்டா மாற்றம்,முதியோர் உதவித்தொகை, அரசின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு ஆணை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினர், அதை தொடர்ந்து துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி பேசுகையில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறார். எல்லா மக்களுக்கும் திட்டங்கள் சேர வேண்டும் என்பதற்காக இந்த முகாம் நடத்தப்படுகிறது. அதனை பொது மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.                            


மேலும் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பேசுகையில், முகாம்களில் அளிக்கப்படும் ஒவ்வொரு மனுவும் தனி கவனத்துடன் பரிசீலனை செய்யப்படும். மாணவர்களுக்கான சாதிச் சான்று,வருமான சான்றிதழ்கள் வழங்க பள்ளிகளில் முகாம் நடத்தி மனுக்கள் பெறப்படும் என்றார், முகாமில் ஊராட்சி உதவி இயக்குநர் சையத் பயாஸ் அகமது, மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவர் பாரதி ராமஜெயம், ஒன்றிய குழுத் தலைவர் தமயந்தி ஏழுமலை, மாவட்ட கவுன்சிலர் ஆராஞ்சி ஆறுமுகம் உள்பட பலர் கலந்துக் கொண்டனர்.        


- அ.மு.முஸ்தாக் அகமத், மாவட்ட செய்தியாளர், திருவண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad