காவல் துறை கூடுதல் இயக்குநர் (சட்டம் & ஒழுங்கு) திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம் அவர்கள், திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 11/7/24 அன்று வேலூர் சரகத்தைச் சேர்ந்த வேலூர், திருவண்ணாமலை, இராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த காவல் கண்காணிப்பாளர்கள், கூடுதல் காவல்கண்காணிப்பாளர்கள், காவல் துணை கண்காணிப்பாளர்கள் ஆகியோர்களுடன் சட்டம் ஒழுங்கு சம்பந்தமான ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
இதில் ரவுடிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பது, கள்ளச்சாராயம், கஞ்சா, லாட்டரி போன்ற சட்ட விரோத செயல்களை ஒழிப்பது மற்றும் பொது மக்களின் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுப்பது போன்ற அறிவுரைகளை வழங்கினார்.
- அ.மு. முஸ்தாக் அகமத்,மாவட்ட செய்தியாளர்,திருவண்ணாமலை.
No comments:
Post a Comment