பின்னர் அவர்கள் போலியான இணையதளத்தில் பணத்தை இழந்ததை அறிந்து உடனடியாக இழந்த பணத்தை மீட்டு கொடுக்குமாறு சைபர் கிரைம் பண மோசடி புகார் எண் 193 என்ற எண்ணிற்கு தொடர்புகொண்டு புகார் அளித்துள்ளார்.
இதனை தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கி.கார்த்திகேயன். இ.கா.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் M.பழனி அவர்களின் தலைமையிலான சைபர் கிரைம் போலிசார் உரிய விசாரணை செய்து தரிதமாக செயல்பட்டு அவர்கள் இழந்த பணத்தை வங்கியின் உதவியுடன் மீட்டனர்.
மேற்படி இன்று திருவண்ணாமலை மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் கி.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்கள், அவ்விருவரையும் நேரில் அழைத்து மிட்கப்பட்ட பணம் மொத்தம் ரூ.9,98,021/- ஐ உரியவர்களிடம் ஒப்படைத்தார். இதில் சைபர் கிரைம் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் M.பழனி அவர்கள் உடனிருந்தார்.
No comments:
Post a Comment