ஒரு மாதத்தில் மனுக்களுக்கு தீர்வு காணப்படும் என மக்களுடன் முதல்வர் சிறப்பு திட்டம் முகாமில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசினார். - தமிழக குரல் - திருவண்ணாமலை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 12 July 2024

ஒரு மாதத்தில் மனுக்களுக்கு தீர்வு காணப்படும் என மக்களுடன் முதல்வர் சிறப்பு திட்டம் முகாமில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.


திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஊரக பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் 11/7/24 அன்று தொடங்கியது. அதையொட்டி திருவண்ணாமலை ஒன்றியம் கீழ்செட்டிப்பட்டு கிராமத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் நடந்தது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி,எம்எல்ஏ.க்கள் மு.பெ.கிரி,பெ.சு.தி.சரவணன்,ஓ.ஜோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். டிஆர்ஓ பிரியதர்ஷினி வரவேற்றார்.                   

நிகழ்ச்சியில் பொது மக்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கி பொதுப்பணித் துறை அமைச்சர் பேசியதாவது :- மக்கள் மனம் அறிந்து  தேவைகளை புரிந்து சிறப்பான சேவைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றி வருகிறார். ஏற்கனவே நடந்த மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாமில் மாநகராட்சிகளில் 641,நகராட்சிகளில் 632 பேருராட்சிகளில்,520,புறநகர் பகுதிகளில் 225 முகாம்கள் நடத்தப்பட்டு 9.4 லட்சம் மனுக்கள் பெறப்பட்டன. அதில்,8.4 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.                


2வது கட்டமாக 12,525 கிராம ஊராட்சிகளில் மக்கள் பயன் பெறுவதற்காக மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. அதையொட்டி தருமபுரியில் முதல்வர் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. அதையொட்டி தருமபுரியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முகாமை தொடங்கி வைத்திருக்கிறார். திருவண்ணாமலையை மாவட்டமாக உருவாக்கியது திமுக ஆட்சி தான். அதற்கு முன்பு வரை வேலூருக்கு சென்று தான் கலெக்டரை சந்திக்க வேண்டிய நிலை இருந்தது. அமைச்சரை பார்ப்பது அதிசயம் என்ற காலம் முன்பு இருந்தது. முதலமைச்சரை பார்க்க கோட்டைக்கு தான் போக வேண்டும் என்ற நிலை இருந்தது.             


ஆனால் அந்த நிலையை எல்லாம் மாற்றியது திராவிட மாடல் ஆட்சி மக்கள் உணர்வுகளை புரிந்து ஆட்சி நடத்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின், கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் எல்லாம் மக்களை தேடி வந்து மனுக்களை பெற்று தீர்வு காணும் நிலையை ஏற்படுத்தியிருக்கிறார். ஒரு காலத்தில் டாக்டர்களிடம் சிகிச்சை பெற மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டும். திருவண்ணாமலையில் ஒருசில டாக்டர்கள் தான் இருந்தனர். நீண்ட வரிசையில் காத்திருந்தால் மட்டுமே அவர்களை பார்க்க முடிந்தது. ஆனால்,மக்களைத் தேடி மருத்துவம் எனும் புரட்சிக்கரமான திட்டத்தை முதல்வர் கொண்டு வந்து சிகிச்சை அளிக்கின்றனர். மருந்து மாத்திரைகளை வழங்குகின்றனர்.             


மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் 3.75 லட்சம் மனுக்கள் பய்னடைந்துள்ளனர். அதே போல் நம்மை காக்கும் திட்டத்தின் மூலம் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு இதுவரை 2.50 லட்சம் உயிர்களை முதல்வர் காப்பாற்றியிருக்கிறார், மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்களில் அளிக்கப்படும் மனுக்களுக்கு ஒரு மாதத்தில் தீர்வு காணப்படும். மனுக்களை எழுதி எழுதி காகிதமும்,பேனா மையும் தீர்ந்து போன காலம் மாறி விட்டது. இப்போது மக்கள் அளிக்கும் மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வு காணும் திராவிட மாடல் ஆட்சி நடக்கிறது. திருவண்ணாமலை மாவட்ட,நகர பகுதிகளில் ஏற்கனவே நடந்த மக்களுடன் முதல்வர் 25453 மனுக்கள் பெறப்பட்டு 15,528 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. தற்போது மாவட்டத்தில் மாவட்டத்தில் உள்ள 860 கிராம ஊராட்சிகளில் 124 முகாம்கள் நடத்தப்படுகிறது. அரசின் ஆணைகளும்,திட்டங்களும் மக்களுக்கு சென்று சேர்ந்திட இந்த மாவட்டத்தில் அரசு அலுவலர்கள் சிறப்பாக பணி புரிகின்றனர், இவ்வாறு அவர் பேசினார்.                          


நிகழ்ச்சியில் மாநில தடகள சங்க துணை தலைவர் எ.வ.வே.கம்பன், கூடுதல் கலெக்டர் ரிஷப், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனுவாசன், ஒன்றிய குழு தலைவர் கலைவாணி கலைமணி, மூத்தோர் தடகள சங்க துணை தலைவர் கார்த்திக் வேல்மாறன், மெய்யூர் சந்திரன், ஊராட்சி உதவி இயக்குநர் சையத் பயாஸ் அகமத், பிடிஓ.க்கள், அரசு உயர் அதிகாரிகள் கலந்துக்கொண்டனர். ஆர்டிஓ. மந்தாகினி நன்றி கூறினார்.         


- அ.மு. முஸ்தாக் அகமத், மாவட்ட செய்தியாளர், திருவண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad