தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை, முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை, மற்றொரு வழக்கில் வாலிபருக்கு 4 ஆண்டுகள் சிறை. - தமிழக குரல் - திருவண்ணாமலை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 6 July 2024

தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை, முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை, மற்றொரு வழக்கில் வாலிபருக்கு 4 ஆண்டுகள் சிறை.


திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி (67), டீக்கடையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். திருமணமாகாதவர். கடந்த 13-2-2020 அன்று அதே பகுதியை சேர்ந்த 5 வயது சிறுமி தெருவில் விளையாடிக்கொண்டிருந்தார். அந்த சிறுமியை கடைக்கு அழைத்துச் சென்று சாச்லேட் வாங்கி தருவதாக ஏமாற்றி தனது வீட்டுக்குள் அழைத்துச் சென்ற குப்புசாமி சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார். 

சிறுமியின் அழுகுரல் கேட்டு அங்கிருந்தவர்கள் சென்று பார்த்தனர். குப்புசாமி அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். அதனை தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் திருவண்ணாமலை மகளிர் போலிசில் புகார் அளித்தனர். அதைத் தொடர்ந்து அப்போதைய இன்ஸ்பெக்டர் தமிழரசி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார். சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவர் குப்புசாமியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.     


இது தொடர்பான வழக்கு விசாரணை திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் செயல்படும் போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்தசாரதி,சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவர் குப்புசாமிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் 3 ஆயிரம் ரூபாய் அபாரதமும் அதை செலுத்த தவறினால் கூடுதலாக 6 மாத சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு அளித்தார். அதைத் தொடர்ந்து கோர்ட்டில் ஆஜார்படுத்த குப்புசாமியை கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.                    


ஆரணி நகராட்சி பகுதிக்குட்பட்ட பழங்காமல் பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை மகன் ஹரிஹரன் (24)இவர் அதே பகுதியைச் சேர்ந்த சிறுமியிடம் 13-7-2022 அன்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட புகார் தொடர்பாக ஆரணி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபர் ஹரிஹரனை கைது செய்தனர். இது தொடர்பாக வழக்கு விசாரணை திருவண்ணாமலை போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடந்தது.        


வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்தசாரதி, சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட வாலிபர் ஹரிஹரனுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும் 3 ஆயிரம் அபாரதமும் விதித்து 05-7-24 அன்று தீர்ப்பளித்தார். அதை தொடர்ந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட வாலிபர் ஹரிஹரனை கைது செய்து மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.                           


- அ.மு. முஸ்தாக் அகமத், மாவட்ட செய்தியாளர், திருவண்ணாமலை.

No comments:

Post a Comment

Post Top Ad