செங்கம் அருகே வாரிசு சான்றிதழ் வழங்குவதற்காக 1000 ரூபாய் லஞ்சம் பெற்ற பெண் வருவாய் ஆய்வாளர் கைது. - தமிழக குரல் - திருவண்ணாமலை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 2 July 2024

செங்கம் அருகே வாரிசு சான்றிதழ் வழங்குவதற்காக 1000 ரூபாய் லஞ்சம் பெற்ற பெண் வருவாய் ஆய்வாளர் கைது.


திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த இறையூர் பகுதியில் பெண் வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்த பாரதி என்பவரிடம் மேல் நாச்சி பட்டு பகுதியை சேர்ந்த பழனிசாமி என்ற முதியவரிடம் வாரிசு சான்றிதழ் வழங்குவதற்காக 1000 ரூபாய்  லஞ்சம் கேட்ட நிலையில், விவசாயி திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு தகவல் அளித்து அதன் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி வேல்முருகன் தலைமையில் கோபிநாத் குழுவினர் ரசாயனம் கலந்த நோட்டுகளை விவசாயியிடம் கொடுத்து பெண் வருவாய் ஆய்வாளரிடம் கொடுத்தபோது லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கையும் களவுமாக பிடிபட்டார்.இதனை அடுத்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்து வட்டாட்சியர் அலுவலகத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


 - தமிழக குரல் செய்திகளுக்காக செங்கம் செய்தியாளர் கலையரசு 

No comments:

Post a Comment

Post Top Ad