திருவண்ணாமலை மாவட்டத்தில் சாராய விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் எச்சரித்துள்ளார். - தமிழக குரல் - திருவண்ணாமலை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday 23 June 2024

திருவண்ணாமலை மாவட்டத்தில் சாராய விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் எச்சரித்துள்ளார்.


திருவண்ணாமலை மாவட்டத்தில் சாராய விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் எச்சரித்துள்ளார். மேலும்,பொது மக்கள் அளிக்கும் தகவல் ரகசியம் காக்கப்படும் என்றார்.  

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 50க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவத்தின் எதிரொலியாக மாநிலம் முழுவதும் தீவிர கள்ளச்சாராய வேட்டை நடத்த தமிழக அரசு உத்திரவிட்டுள்ளது. அதையொட்டி,அனைத்து மாவட்டங்களிலும் தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது, இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் கள்ளச்சாராய ஒழிப்பு நடவடிக்கை தொடர்பான ஆய்வுக் கூட்டம் 22/6/24 அன்று கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடந்தது.டிஆர்ஓ பிரியதர்ஷினி முன்னிலை வகித்தார். 


கூட்டத்தில் செய்யாறு உதவி கலெக்டர் பல்லவி வர்மா, ஆர்டிஓக்கள் திருவண்ணாமலை மந்தாகினி, ஆரணி பாலசுப்பிரமணி, மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு டிஎஸ்பி ரமேஷ்ராஜ் மற்றும் தாசில்தார்கள் உட்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்துக் கொண்டனர், அப்போது கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்ததாவது, திருவண்ணாமலை மாவட்டத்தில் கள்ளச்சாராய விற்பனையை முற்றிலும் ஒழிக்க தேவையான நடவடிக்கையில் அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். விஏஓ, ஊராட்சி செயலாளர், அங்கான்வாடி பணியாளர்கள் உட்பட கிராமங்களில் பணியாற்றும் அரசுத்துறை பணியாளர்கள், கள்ளச்சாராய விற்பனை நடந்தால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளிக்க வேண்டும்.


கள்ளச்சாராய விற்பனைக்கு முதியவர்கள், மாற்றுத் திறனாளிகளை திட்டமிட்டு பயன்படுத்துகின்றனர். எனவே இந்த சட்ட விரோத தொழிலில் யார் ஈடுபட்டாலும் பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும். கள்ளச் சாராய விற்பனை குறித்து 10581 மற்றும் 8939473233 என்ற எண்களுக்கு பொதுமக்கள் தகவல் அளிக்கலாம். தகவல் அளிப்பவரின் விபரம் ரகசியம் காக்கப்படும். மேலும் மாவட்ட எல்லைகளில் செக்போஸ்ட் அமைத்து கண்காணிக்க வேண்டும். அதேபோல் கஞ்சா விற்பனை மிகவும் ஆபத்தானது. எனவே அதை முற்றிலுமாக கட்டுப்படுத்தவும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.                           


விழாக்கள் மற்றும் துயர நிகழ்வுகள் மற்றும் சந்தைகள் போன்ற இடங்களில் கள்ளச்சாராய பயன்பாடு அதிகமாக இருப்பது வழக்கம். எனவே இதுபோன்ற இடங்களை கண்காணிக்க வேண்டும். கிராம அளவில் இருந்து தகவல்கள் வர வேண்டும். அப்போது தான் நடவடிக்கை எடுக்க முடியும். ஜவ்வாதுமலை மலை பகுதியில் தனி கவனம் செலுத்த வேண்டும். கள்ளச்சாராயம் காய்ச்சுவோர் மற்றும் விற்போர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். கள்ளச்சாராயம் இல்லாத மாவட்டமாக திருவண்ணாமலையை மாற்ற அனைவரது ஒத்துழைப்பு அவசியம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.                                  

- அ.மு. முஸ்தாக் அகமத்,மாவட்ட செய்தியாளர்,திருவண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad