செய்யாறு அருகே வெம்பாக்கம் ஜமாபந்தி 3ம் நாள் முகாமில் 410 மனுக்கள் மீது துறை வாரியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு. - தமிழக குரல் - திருவண்ணாமலை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 21 June 2024

செய்யாறு அருகே வெம்பாக்கம் ஜமாபந்தி 3ம் நாள் முகாமில் 410 மனுக்கள் மீது துறை வாரியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு.


செய்யாறு அருகே வெம்பாக்கம் தாலுகாவில் 21ந் தேதி 3ம் நாளில் பங்கேற்ற மாவட்ட ஆட்சித் தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் 410 மனுக்களை பெற்று துறை வாரியாக உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவு இட்டார்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த வெம்பாக்கம் தாலுகாவில் கடந்த 19ந் தேதி 1433 பசலி வருவாய் தீர்வாய கணக்கு தணிக்கை எனப்படுகின்ற ஜமாபந்தி நிகழ்வு மாவட்ட கலெக்டர் தெ.பாஸ்கர பாண்டியன் பூஜை செய்து முகாமை தொடங்கி வைத்தார். முதல் நாள் முகாமில் 177 மனுக்களும்,2வது நாள் முகாமில் 202 மனுக்களும் 3ம் நாள் முகாமில் 410 மனுக்களும் பெறப்பட்டு துறைவாரியான நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது.


வெம்பாக்கம் உள் வட்டத்திற்குட்பட்ட 20 கிராம பொதுமக்களிடமிருந்து 410 மனுக்கள் 3ம் நாளில் மட்டும் பெறப்பட்டது. இதில் பட்டா மாறுதல் - 156,உட்பிரிவு பட்டா மாறுதல் -78,அளந்து அத்து காட்டுதல் - 18,ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் 17,புதிய குடும்ப அட்டை கோரி-4, இலவச வீட்டு னை பட்டா-36, முதியோர், மாற்றுத் திறனாளி உதவித் தொகை-17, இதர துறைகள்-51, இதர மனுக்கள்-33 ஆக மொத்தம் 410 மனுக்களை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பெற்று துறை ரீதியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்திரவிட்டார்.


முன்னதாக வெம்பாக்கம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் மரக்கன்றினை நட்டார். நிகழ்ச்சியில் மாவட்ட வேளாண்மை துறை இணை இயக்குநர் அரக்குமார், மாவட்ட அலுவலக மேலாளர் (பொது) ரவி, நில அளவை பதிவேடுகள் துறை உதவி இயக்குநர் திருநாவுக்கரசு, வெம்பாக்கம் தாசில்தார் பா.துளசிராமன், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் க.பெருமாள் மற்றும் வருவாய் அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் மற்றும் பொது மக்கள் பலரும் முகாமில் பங்கேற்றிருந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad