திருவண்ணாமலை மாவட்டம், திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்தில் கோட்டாட்சியர் திருமதி இரா.மந்தாகினி தலைமையில் 19-6-24 அன்று முதல் நாள் 1433ம் ஆண்டு பசலி (2023-2024) ஆண்டிற்கான வருவாய் தீர்ப்பாயம் ஜமாபந்தி தொடங்கியது. 19ம் தேதி நாயுடுமங்கலம் உள்வட்டம், 20ந் தேதி திருவண்ணாமலை வடக்கு உள் வட்டம், 21ந் தேதி துரிஞ்சாபுரம் உள் வட்டம், 24ந் தேதி தச்சம்பட்டு உள் வட்டம், 25ந் தேதி தச்சம்பட்டு (ம) மங்கலம் உள்வட்டம், 26ந் தேதி திருவண்ணாமலை தெற்கு உள்வட்டம், 27ந் தேதி திருவண்ணாமலை தெற்கு மற்றும் வெறையூர் உள்வட்டம் ஆகிய கிராமங்களுக்கு கிராம தணிக்கை நடைபெறுகிறது.
தினம் நடைபெறும் கிராம பகுதிகளை சார்ந்த பொதுமக்கள் தங்கள் பகுதி பிரச்சினை குறித்து மனுக்கள் தரலாம். பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் துறை வாரியாக பிரித்து அனுப்பி ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
- அ.மு. முஸ்தாக் அகமத்,மாவட்ட செய்தியாளர்,திருவண்ணாமலை.
No comments:
Post a Comment