திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு. கி.கார்த்திகேயன், இ.கா.ப. அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி,திருவண்ணாமலை குற்றப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் (I/c திருவண்ணாமலை நகர உட்கோட்டம்)டி.சாந்தலிங்கம் அவர்கள் மேற்பார்வையில் திருவண்ணாமலை நகர காவல் ஆய்வாளர் ஜெ.ஆனந்தன் அவர்கள் தலைமையில் காவல் உதவி ஆய்வாளர் பச்சையப்பன் மற்றும் காவலர்கள் இணைந்து திருவண்ணாமலை அரசினர் கலை கல்லூரி எதிரே உள்ள பகுதிகளில் நடத்திய தேடுதல் வேட்டையில் திருவண்ணாமலை மாவட்டம் & வட்டம், சமுத்திரம் காலனி பகுதியைச் சேர்ந்த (1) முனியம்மாள் வயது 32, க/பெ. சுப்பிரமணி, (2)சஞ்சய் வயது 25, த/பெ. சரவணன், (3) தர்மன்,வயது 26, த/பெ.முருகன், (4) கவிதா வயது 42,க/பெ. ஆறுமுகம் (5) திருவண்ணாமலை டவுன், கல் நகர், சந்துரு, வயது 25, த/பெ. முருகன் ஆகியோர் அரசினர் கலை கல்லூரி எதிரே உள்ள பூங்காவிற்கு அருகே கஞ்சா விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டு அவர்களை கைது செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.அவர்களிடமிருந்து சுமார் 7.5 கிலோ கிராம் எடையுள்ள கஞ்சா கைப்பற்றப்பட்டது.
- அ.மு. முஸ்தாக் அகமத்,மாவட்ட செய்தியாளர்,திருவண்ணாமலை.
No comments:
Post a Comment