திருவண்ணாமலை மாவட்டத்தில் 12 தாலுகாவில் ஜமாபந்தியின் 2ம் நாள். - தமிழக குரல் - திருவண்ணாமலை

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

Thursday, 20 June 2024

திருவண்ணாமலை மாவட்டத்தில் 12 தாலுகாவில் ஜமாபந்தியின் 2ம் நாள்.

IMG_20240620_172805_947

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 12 தாலுகாக்களில் ஜமாபந்தி 19-6-24 அன்று தொடங்கியது. நிறைவு நாளன்று விவசாயிகள் மாநாடு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வருவாய் தீர்வாயம் எனப்படும் ஜமாபந்தி ஆண்டுதோறும் அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் நடைபெறுவது வழக்கம். அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் 19-6-24 அன்று ஜமாபந்தி தொடங்கியது.             


ஜமாபந்தியில் ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட வருவாய் உள் வட்டங்களைச் சேர்ந்த கிராமங்களுக்கான வருவாய் நிர்வாக கணக்குகள் தணிக்கை செய்யப்படுகிறது. மேலும் பட்டா மாறுதல், வருவாய் துறை சம்பந்தமான புகார்கள்,குறைகளுக்கு தீர்வு காணப்படுகிறது. இந்நிலையில் வெம்பாக்கம் தாலுகாவில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் 19-6-24 முதல் ஜமாபந்தி நடைபெற்று வருகிறது. தண்டராம்பட்டு தாலுகாவில் டிஆர்ஓ பிரியதர்ஷினி தலைமையில் 19-6-24 முதல் ஜமாபந்தி நடைபெற்று வருகிறது. 


போளூர் தாலுகாவில் ஆரணி  ஆர்டிஓ பாலசுப்பிரமணியன் தலைமையிலும், வந்தவாசி தாலுகாவில் செய்யாறு உதவி கலெக்டர் பல்லவிவர்மா தலைமையிலும், கலசப்பாக்கம் தாலுகாவில் மாவட்ட சமூக பாதுகாப்பு அலுவலர் தீபசித்ரா தலைமையிலும், கீழ்பெண்ணாத்தூர் தாலுகாவில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) தலைமையிலும், சேத்துப்பட்டு தாலுகாவில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தலைமையிலும், செய்யாறு தாலுகாவில் கலால் உதவி ஆணையர் தலைமையிலும்,செங்கம் தாலுகாவில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் தலைமையிலும், ஜமுனாமரத்தூர் தாலுகாவில் மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் தலைமையிலும், ஆரணி தாலுகாவில் மாவட்ட வழங்கல் அலுவலர் தலைமையிலும், திருவண்ணாமலை தாலுகாவில் ஆர்டிஓ மந்தாகினி தலைமையில் 19-6-24 முதல் ஜமாபந்தி நடைபெற்று வருகிறது. ஜமாபந்தியின் 2ம் நாளன்று (20-6-24) திருவண்ணாமலை வடக்கு உள்வட்டத்திற்குட்பட்ட பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டு உடனடியாக விசாரணை நடத்தி தீர்வு காணப்பட்டது. 


தீர்வு காணப்பட்ட உத்திரவுடன் ஆர்டிஓ மந்தாகினி மரக்கன்றினையும் வழங்கினார். இந்நிகழ்வில் தாசில்தார் தியாகராஜன்,சமூக நல தாசில்தார் பரிமளம் மற்றும் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.                              


- அ.மு. முஸ்தாக் அகமத், மாவட்ட செய்தியாளர்,திருவண்ணாமலை

No comments:

Post a Comment

Post Top Ad