ஆரணியில் சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட நபருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.5000/- அபராதம் விதிப்பு. - தமிழக குரல் - திருவண்ணாமலை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 16 June 2024

ஆரணியில் சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட நபருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.5000/- அபராதம் விதிப்பு.


திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட நபருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.5000/- அபராதம் விதிப்பு, கடந்த 20-9-2014ம் தேதி, திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகரம், கொசப்பாளையம் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார், வயது 31,த/பெ. மணவாளன் என்பவர் சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட குற்றத்திற்காக அப்போதைய ஆரணி நகர காவல் நிலைய ஆய்வாளர் மங்கையர்கரசி வழக்கு பதிவு செய்து செல்வகுமார் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

அந்த வழக்கு திருவண்ணாமலை போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் 15-6-24 அன்று நீதிபதி அவர்கள் குற்றவாளி செல்வகுமார் என்பவருக்கு 7 வருட சிறை தண்டனை மற்றும் ரூ.5000/- அபாரதம் விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளார். அதன் பேரில் செல்வகுமாரை வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.                                    


- அ.மு. முஸ்தாக் அகமத், மாவட்ட செய்தியாளர், திருவண்ணாமலை 

No comments:

Post a Comment

Post Top Ad