ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம், பெண்குறைப்பாடி கிராமத்தை சேர்ந்தவர்கள் சசிதர் (49) இவரது மனைவி கல்யாணி (33) மகன் ராமச்சந்திரன்(11) மகள் ஸ்ரீரிதிஷா(8) இவர்களது உறவினர் ரவி (24) ஈஸ்வரி (62) 5 பேரும் திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக 14-6-24 அன்று இரவு காரில் புறப்பட்டனர். காரை சசிதர் ஓட்டிச் சென்றார்.
15-6-24 காலை 6 மணியளவில் திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த வசூர் கிராமம், அழகர்மலையான் ஓட்டல் அருகே சென்ற போது கார் நிலைத் தடுமாறி தாறுமாறாக சென்று சாலையோரம் உள்ள மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரின் முன் பகுதி நொறுங்கியது. காரில் இருந்த கல்யாணி, ஸ்ரீரிதிஷா, ரவி ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
ஈஸ்வரி, ராமச்சந்திரன், சசிதர் ஆகியோர் படுகாயமடைந்தனர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போளூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். மேலும் மீட்பு பணியில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த இன்ஸ்பெக்டர் ஹேமாவதி மற்றும் போலீசார் பொதுமக்கள் உதவியுடன் படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் கல்யாணி ஸ்ரீரிதிஷா, ரவி ஆகியோரின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி லருகின்றனர். விபத்தில் தாய் மகள் உட்பட 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment