திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்தில் 21/6/2024 அன்று நடைபெற்ற 3வது நாள் ஜமாபந்தி நிகழ்ச்சியில் துறிஞ்சாபுரம் உள் வட்டத்தில் உள்ள பொதுமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளிடமிருந்து கோட்டாட்சியர் ஆர்.மந்தாகினி மனுக்களை பெற்றுக்கொண்டார். இந்த ஜமாபந்தியில் பட்டா மாறுதல்,உட்பிரிவு பட்டா மாறுதல், நில அளவை கருவி, புதிய குடும்ப அட்டை கோருதல், முதியோர் உதவித் தொகை மற்றும் மாற்றுத் திறனாளி உதவித் தொகை கோருதல் ஆகியவற்றுக்கான மனுக்கள் பெறப்பட்டன.
இந்த ஜமாபந்தியில் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் முருகன், வட்டாட்சியர் தியாகராஜன், சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் திருமதி பரிமளம்,வட்ட வழங்கல் அலுவலர் கே.துரைராஜ், மண்டல துணை தாசில்தார் எஸ். மஞ்சுநாதன், தலைமையிடத்து துணை தாசில்தார் மணிகண்டன் மற்றும் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
- அ.மு.முஸ்தாக் அகமத்,மாவட்ட செய்தியாளர், திருவண்ணாமலை.
No comments:
Post a Comment