திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் 2.33 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் சி.என். அண்ணாதுரை அமோக வெற்றி. - தமிழக குரல் - திருவண்ணாமலை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday 5 June 2024

திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் 2.33 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் சி.என். அண்ணாதுரை அமோக வெற்றி.


திருவண்ணாமலை தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை, மார்க்கெட் கமிட்டி வாளகத்தில் 04-6-24 அன்று நடந்தது.  திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் ஆண்கள் 7,54,533 பெண்கள் 7,78,445. திருநங்கைகள் 121 உட்பட 15,33,099 வாக்காளர்கள் உள்ளனர்.அதில் ஆண்கள் 5,58,720 பெண்கள் 5,79,343,திருநங்கைகள் 39 உட்பட 11,38,102 வாக்குகள் பதிவானது. இது தவிர தேர்தல் பணியில் ஈடுபட்ட அலுவலர்கள்,மூத்த குடிமக்கள்,மாற்றுத் திறனாளிகள், ராணுவ வீரர்கள் ஆகியோரது தபால் வாக்குகள் 10,964 பதிவானது.  
                    

சட்டப்பேரவை தொகுதிகள் வாரியாக திருவண்ணாமலை, கீழ்பெண்ணாத்தூர், செங்கம், கலசப்பாக்கம், ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் உட்பட 6 தொகுதிகளுக்கான வாக்குகள் தனித்தனி அறையில் எண்ணப்பட்டு முடிவுகள் சுற்று வாரியாக வெளியிடப்பட்டன. முதல் சுற்று தொடங்கி 23வது சுற்று வரை தொடர்ந்து ஒவ்வொரு சுற்றிலும்  திமுக வேட்பாளர் சி.என். அண்ணாதுரை முன்னிலை வகித்தார். 


அதன்படி இறுதிச் சுற்றில் திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை 5,47,379 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் எம்.கலியபெருமாள் 3,13,448 வாக்குகளும், பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமன் 1,56,650 வாக்குகளும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ரமேஷ் பாபு 83,869 வாக்குகளும் பெற்றனர். மேலும் நோட்டாவுக்கு 11,957 வாக்குகளும் பதிவாகியிருந்தது. இந்நிலையில் திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை 2,33,931 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக தேர்தல் நடத்தும் அலுவலரும் கலெக்டருமான பாஸ்கர பாண்டியன் அறிவித்தார். தொடர்ந்து வெற்றி பெற்றதற்கான வெற்றிச் சான்றிதழை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு முன்னிலையில் திமுக வேட்பாளர் சி.என். அண்ணாதுரை பெற்றுக்கொண்டார். 


அப்போது அமைச்சர் மஸ்தான், துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி ஆகியோர்உடனிருந்தனர். திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் தொடர்ந்து  இரண்டாவது முறையாக வெற்றி பெற்று திமுக வேட்பாளர் சி.என். அண்ணாதுரை எம்.பியாக பதவியேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.                            


- அ.மு. முஸ்தாக் அகமத்,மாவட்ட செய்தியாளர்,திருவண்ணாமலை 

No comments:

Post a Comment

Post Top Ad