திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த ஜுன் 8ந் தேதி சென்னை அண்ணா அறிலாயத்தில் நடைபெற்ற திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் படி,கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழா, 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் வெற்றி அளித்த தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா,சீர்மிகு வெற்றிக்கு திமுகவை வழிநடத்தி சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா என முப்பெரும் விழா அறிவிக்கப்பட்டது.
அதன்படி வரும் 15ந் தேதி கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெற உள்ள விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டணி கட்சித் தலைவர்கள் மற்றும் வெற்றி பெற்ற 40 எம்பிகளும் கலந்துக்கொள்கிறார்கள். எனவே திருவண்ணாமலை தெற்கு வடக்கு மாவட்ட திமுக நிர்வாகிகள், ஒன்றிய நகர பேரூர் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்பின் நிர்வாகிகள், அணிகளின் நிர்வாகிகள், கிளை மற்றும் வட்ட நிர்வாகிகள் முன்னோடிகள் அலைகடலென திரண்டு வந்து கோவை முப்பெரும் விழாவினை சிறப்பித்திட கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- அ.மு. முஸ்தாக் அகமத்,மாவட்ட செய்தியாளர்,திருவண்ணாமலை.
No comments:
Post a Comment