2013ம் ஆண்டு சிவகங்கை மாவட்டத்தில் நடந்த காவல் நிலைய மரணத்தில் வெள்ளத்துரைக்கு சம்மந்தம் இருப்பதாக விசாரணையில் முடிவான நிலையில் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்ட குற்ற ஆவண காப்பக ஏடிஎஸ்பி வெள்ளத்துரை,2004ம் ஆண்டு வீரப்பனை சுட்டுக்கொன்ற குழுவிலும் இடம் பெற்றிருந்தார். மேலும் சென்னை அயோத்திகுப்பத்தில் ரௌடி வீரமணி என்பவரை என்கவுண்டர் செய்ததில் பிரபலமானார்.
இதேபோன்று கொடும் குற்றங்களில் ஈடுபட்டு வந்த 12 ரௌடிகளை என்கவுண்டர் செய்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.இந்த நிலையில் கடந்த சில மாதங்கள் முன்பு சென்னை புறநகர் பகுதி காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புத்தூர் தொழிற்சாலை நிறைந்த பகுதிகளில் ரௌடிசம் செய்பவர்களை ஒடுக்குவதற்கு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டு இருந்தார்.
இதையடுத்து தற்போது திருவண்ணாமலை மாவட்ட குற்ற ஆவண காப்பக ஏடிஎஸ்பி ஆக பணியிலிருந்து 31-5-24 அன்று ஓய்வு பெற இருந்த நிலையில் 30-5-24 மாலை பணியிடைநீக்கம் செய்யப்பட்டது பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- அ.மு.முஸ்தாக் அகமத்,மாவட்ட செய்தியாளர், திருவண்ணாமலை.
No comments:
Post a Comment