திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த சாத்தனூர் காப்பு காடு பகுதியில் வனச்சரக அலுவலர் நா சீனுவாசன் தலைமையில் வனக்காப்பாளர்கள் விலங்கு வேட்டை தடுப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கிகளுடன் வன விலங்குகளை வேட்டை முயன்றவர்களை வனத்துறையினர் மடக்கி பிடித்து விசாரணை செய்த போது அவர்கள் தண்டராம்பட்டு சேர்ந்த சிவலிங்கம் வயது( 50) தனுஷ் வயது (23 )பூபதி வயது (23) இவர்கள் மூவரும் வனவிலங்குகளை வேட்டையாடி இறைச்சிகளை விற்று வருவதாக தெரியவந்தது . பின்னர் 2 நாட்டு துப்பாக்கிகளை பறிமுதல் செய்து இவர்கள் மூவரும் கைது செய்து செங்கம் கிளைச்சிறையில் அடைத்தனர்.
- தமிழக குரல் செய்திகளுக்காக செங்கம் -செய்தியாளர் கலையரசு
No comments:
Post a Comment