திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரையை ஆதரித்து திருவண்ணாமலையில் வீதி, வீதியாக நடந்து சென்று அமைச்சர் எ.வ.வேலு தீவிர வாக்கு சேகரிப்பு. பொது மக்கள் உற்சாக வரவேற்பு. - தமிழக குரல் - திருவண்ணாமலை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 14 April 2024

திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரையை ஆதரித்து திருவண்ணாமலையில் வீதி, வீதியாக நடந்து சென்று அமைச்சர் எ.வ.வேலு தீவிர வாக்கு சேகரிப்பு. பொது மக்கள் உற்சாக வரவேற்பு.


திருவண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளர் சி.என். அண்ணாதுரையை ஆதரித்து திருவண்ணாமலையில் வீதி வீதியாக நடந்து சென்று அமைச்சர் எ.வ.வேலு வாக்கு சேகரித்தார். அப்போது பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். திருவண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளர் சி.என். அண்ணாதுரையை ஆதரித்து பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தொடர்ந்து தொகுதி முழுவதும் சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்து வருகிறார். 

அமைச்சர் செல்லும் இடங்களில் எல்லாம் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர். எனவே,திமுக வேட்பாளர்களுக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருகிறது. இந்நிலையில் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் மாட வீதியான பெரிய தெரு, பே கோபுரம் தெரு, திருவூடல் தெரு, செங்கம் சாலை, ரமணாஸ்ரமம் பகுதி வரை சுட்டெரிக்கும் கோடை வெயிலையும் பொருட்படுத்தாமல் வீதி, வீதியாக நடந்து சென்று அமைச்சர் எ.வ.வேலு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.


மேலும் பொது மக்கள் மற்றும் வியாபாரிகளிடம் திமுக அரசின் சாதனைகள் மற்றும் தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி ஆதரவு திரட்டினார். அப்போது திருவண்ணாமலை நகரின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பல்வேறு திட்டங்கள் திமுக ஆட்சி காலங்களில் தான் கிடைத்திருக்கிறது என பொது மக்கள் தெரிவித்தனர். மேலும் மகளிர் உரிமை தொகை போன்ற சிறப்பான திட்டங்களை வழங்கிய முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.                   


பிரச்சாரத்தின் போது மாநில மருத்துவரணி துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன், தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.ஸ்ரீதரன், நகர செயலாளர் கார்த்திக்வேல்மாறன், மாவட்ட துணை செயலாளர் பிரியா விஜயரங்கன், மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம், நகராட்சி தலைவர் நிர்மலாவேல்மாறன், துணை தலைவர் ராஜாங்கம், சி. சண்முகம், டிவீஎம். நேரு, எ.டபிள்யூ.சர்தார் காசீம், ஷெரீப், அருணை ஆனந்தன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்துக்      கொண்டனர். அதே போல் கூட்டணி கட்சிகள் நிர்வாகிகளும் கலந்துக் கொண்டனர்.                                    


- அ.மு. முஸ்தாக் அகமத்,மாவட்ட செய்தியாளர்,திருவண்ணாமலை.

No comments:

Post a Comment

Post Top Ad