மாவட்ட திமுக சார்பில் மாவட்ட திமுக அலுவலகத்தில் 14-4-24 அன்று அம்பேத்கர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. - தமிழக குரல் - திருவண்ணாமலை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 15 April 2024

மாவட்ட திமுக சார்பில் மாவட்ட திமுக அலுவலகத்தில் 14-4-24 அன்று அம்பேத்கர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.


திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் மாவட்ட திமுக அலுவலகத்தில் 14-4-24 அன்று அம்பேத்கர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. எம்.எல்.ஏ.க்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், மாவட்ட பொருளாளர் எஸ்.பன்னீர்செல்வம், மாவட்ட துணை செயலாளர் பிரியா விஜயரங்கன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் ப.கார்த்திக்வேல்மாறன் வரவேற்றார்.        

      

விழாவில் அலங்கரிக்கப்பட்ட அம்பேத்கார் உருவப்படத்திற்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதனை தொடர்ந்து அண்ணல் அம்பேத்கார் பிறந்த நாளில் சாதி வேறுபாடுகள் ஏதுமில்லாத சமத்துவ சமுதாயத்தை அமைக்க நாம் அனைவரும் பாடுபடுவோம் எனும் சமத்துவ நாள் உறுதிமொழியை அமைச்சர் எ.வ.வேலு முன்னிலையில் அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.                   


அதை தொடர்ந்து திருவண்ணாமலை - திண்டிவனம் சாலையில் தலைமை தபால் நிலையம் அருகே அமைந்துள்ள முழு உருவச் சிலைக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் நகராட்சித் தலைவர் நிர்மலா வேல்மாறன், மாவட்ட அமைப்பாளர்கள் டிவிஎம். நேரு, இரா.கார்த்திகேயன், கு.ரவி, சர்தார் காசீம், ஷெரிப் உள்பட பலர் கலந்துக் கொண்டனர்.                                  


- அ.மு. முஸ்தாக் அகமத்,மாவட்ட செய்தியாளர்,திருவண்ணாமலை.

No comments:

Post a Comment

Post Top Ad