திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி கிரிவலம் முன்னிட்டு 120 இடங்களில் அன்னதானம் வழங்க அனுமதி. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வழங்கினார். தரமாகவும், சுகாதாரமாகவும் வழங்க வேண்டுகோள். - தமிழக குரல் - திருவண்ணாமலை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday 22 April 2024

திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி கிரிவலம் முன்னிட்டு 120 இடங்களில் அன்னதானம் வழங்க அனுமதி. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வழங்கினார். தரமாகவும், சுகாதாரமாகவும் வழங்க வேண்டுகோள்.


திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி விழா 22ந் தேதி விமரிசையாக நடக்கிறது. அதையொட்டி சுமார் 25 லட்சம் பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பக்தர்களின் வசதிக்கான பல்வேறு ஏற்பாடுகள் விரிவாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு அன்னதானம் வழங்க சுமார் 120 இடங்களில் உரிய கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதையொட்டி திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் 22ந் தேதி அன்னதானம் வழங்குவோருக்கான அனுமதியை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வழங்கினார். அப்போது கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தாவது:- திருவண்ணாமலை நகரின் முக்கிய இடங்கள் மற்றும் கிரிவலப் பாதையில் மாவட்ட நிர்வாகம் அனுமதித்துள்ள இடத்தில்,குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே அன்னதானம் வழங்க வேண்டும். கிரிவலப் பாதையில் பக்தர்களுக்கு இடையூறு இல்லாமல் கிரிவலப் பாதையில் இருந்து 100 மீட்டர் உட்புறம் அன்னதானம் வழங்க வேண்டும். நோய் தொற்று உள்ளவர்கள் அன்னதானம் சமைக்கவோ மற்றும் வழங்கவோ அனுமதிக்க கூடாது. 


வாழை இலையில் மட்டுமே அன்னதானம் வழங்க வேண்டும். உணவு பொருட்கள் தரமானதாகவும் தூய்மையானதாகவுமற்றும் கலப்படம் இல்லாமலும் இருக்க வேண்டும்.அன்னதானம் வழங்கும் இடத்தை தூய்மையாக பரமாரிப்பது அன்னதானம் வழங்குவோரின் கடமையாகும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் தட்டுகளில் அன்னதானம் வழங்கக்கூடாது. பிளாஸ்டிக் டம்பளர்கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யக்கூடாது. பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் அலுமினிய முலாம் பூசப்பட்ட தட்டுகளில் உணவு வழங்குவது உடல் நலனுக்கும், சுற்றுச் சூழலுக்கும் கேடு தரக்கூடியது. 


உணவு கழிவுப் பொருட்களை போடுவதற்கு குப்பை தொட்டிகளை ஏற்பாடு செய்ய வேண்டும். அன்னதானம் வழங்குமிடத்தை சுத்தம் செய்து விட்டு செல்ல வேண்டும். பக்தர்களுக்கு வழங்கும் உணவு சுவையாகவும்,,தரமாகவும் இருந்தால் தான் விரும்பி சாப்பிடுவார்கள். எனவே அதில் கவனம் செலுத்த வேண்டும். அன்னதானம் வழங்கும் இடங்களை நேரில் ஆய்வு செய்ய உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு உத்திரவிடப்பட்டுள்ளது. மேலும் நானும் நேரில் ஆய்வு செய்ய இருக்கிறேன். அதோடு அன்னதானத்தை நானும் சாப்பிட இருக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.      


- அ.மு. முஸ்தாக் அகமத்,மாவட்ட செய்தியாளர்,திருவண்ணாமலை.

No comments:

Post a Comment

Post Top Ad