திருவண்ணாமலை ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் கோவில் உண்டியல் காணிக்கை என்னும் பணி தொடக்கம். - தமிழக குரல் - திருவண்ணாமலை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday 6 March 2024

திருவண்ணாமலை ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் கோவில் உண்டியல் காணிக்கை என்னும் பணி தொடக்கம்.


திருவண்ணாமலையில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு ஒரு மாதத்தில் ரூ.2.43 கோடி ரொக்கம், 165 கிராம் தங்கம், 1,060 கிராம் வெள்ளியை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தி உள்ளனா். அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு தினமும் ஏராளமான உள்ளூா், வெளியூா் பக்தா்கள் வந்து, செல்கின்றனா். எனவே, மாதம்தோறும் கோயிலில் உண்டியல்களில் சேகரமாகும் காணிக்கை பணம் எண்ணப்பட்டு வருகிறது.

அதன்படி, மாா்ச் மாதத்துக்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி செவ்வாய்க்கிழமை காலை 8 மணி முதல் இரவு வரை நடைபெற்றது.கோயில் இணை ஆணையா் சி.ஜோதி, அறங்காவலா் குழுத் தலைவா் ஜீவானந்தம் மற்றும் கோயில் ஊழியா்கள், பக்தா்கள், தன்னாா்வலா்கள் என 100-க்கும் மேற்பட்டோா் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனா்.இதில், ரூ.2 கோடியே 43 லட்சத்து 63 ஆயிரத்து 544 ரொக்கம், 165 கிராம் தங்கம், 1,060 கிராம் வெள்ளியை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தது தெரியவந்தது.


- தமிழக குரல் செய்திகளுக்காக செங்கம் செய்தியாளர் கலையரசு 

No comments:

Post a Comment

Post Top Ad