திருவண்ணாமலையில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள். கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வழங்கினார். - தமிழக குரல் - திருவண்ணாமலை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday 5 March 2024

திருவண்ணாமலையில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள். கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வழங்கினார்.


திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம்  04-03-24 அன்று நடைபெற்றது..கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொது மக்கள் கலந்து கொண்டு கல்வி உதவித்தொகை, வங்கிக் கடனுதவி, முதியோர் உதவித்தொகை, வீட்டு மனைப் பட்டா, சாதிச் சான்று, வேலை வாய்ப்பு, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அடங்கிய மனுக்களை அளித்தனர். 

இதில் 898 மனுக்கள் பெறப்பட்டு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மூலம் உடனடியாக கலெக்டர் விசாரணை நடத்தினார். மேலும் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் 2 பேருக்கு தலா 8 கிராம் தங்க நாணயமும்,2 பேருக்கு மோட்டார் பொருத்தப்பட்ட தையல் எந்திரம்,2 பேருக்கு சக்கர நாற்காலி ஒருவருக்கு  செல்போன் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.


முன்னதாக பெண்கள், வயதானவர்கள், கைக்குழந்தை வைத்திருக்கும் பெண்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அளித்து அவர்களை அமர வைத்து மனுக்களை பெறுவதோடு அல்லாமல் துரிதமாக நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்திரவிட்டார். கைக்குழந்தைளுடன் வரும் தாய்மார்களுக்கு கலெக்டர் பால் வழங்கும் திட்டம் மூலம் பால் வழங்கினார்.                  

தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரப்பினர் நலப்பள்ளி, கல்லூரி விடுதிகளுக்கு 2023-24ம் ஆண்டு கலைத் திருவிழாவில் கட்டுரைப் போட்டி, பேச்சுப்போட்டி, நீளம் தாண்டுதல், ஓட்டப்பந்தயம் போன்ற போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் வழங்கி பாராட்டினார்.                  

கூட்டத்தில் திருவண்ணாமலை மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் தீப சித்ரா, திருவண்ணாமலை உதவி கலெக்டர் மந்தாகினி மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.                                    


- அ.மு.முஸ்தாக் அகமத்,மாவட்ட செய்தியாளர்,திருவண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad