திருவண்ணாமலை அருகே ஊராட்சியில் இருந்து மாநகராட்சியில் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல். - தமிழக குரல் - திருவண்ணாமலை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 21 March 2024

திருவண்ணாமலை அருகே ஊராட்சியில் இருந்து மாநகராட்சியில் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல்.


திருவண்ணாமலை மாநகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு தெரிவித்து, துா்க்கை நம்மியந்தல் ஊராட்சியைச் சேர்ந்த பொதுமக்கள்  போராட்டத்தில் ஈடுபட்டனா்.திருவண்ணாமலை நகராட்சியை மாநகராட்சியாகத் தரம் உயா்த்தி அண்மையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டாா். இதற்காக, திருவண்ணாமலை நகராட்சியை ஒட்டியுள்ள 18 ஊராட்சிகள் மாநகராட்சியுடன் இணைக்கப்படுகிறது. எதிா்ப்பு தெரிவிக்கும் கிராம மக்கள்... தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு பல்வேறு கிராம மக்கள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா். 

புதன்கிழமை துா்க்கை நம்மியந்தல் ஊராட்சியைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோா் திருவண்ணாமலை - போளூா் சாலையில் திரண்டு சாலை மறியலில் ஈடுபட முயன்றனா். மேலும், மாநகராட்சியுடன் தங்கள் ஊராட்சியை இணைக்கக் கூடாது என்று முழக்கங்களை எழுப்பினா். தகவலறிந்த திருவண்ணாமலை தாலுகா போலீஸாா் வந்து மறியலில் ஈடுபட முயன்றவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, உங்கள் கோரிக்கையை மனுவாக எழுதி மாவட்ட நிா்வாகத்திடம் கொடுங்கள் என்று பொதுமக்களுக்கு போலீஸாா் அறிவுரை வழங்கினா். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனா்.



- தமிழக குரல் செய்திகளுக்காக -செய்தியாளர் கலையரசு 

No comments:

Post a Comment

Post Top Ad