கூட்டத்தில் திருவண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை, ஆரணி தொகுதி தி.மு.க. வேட்பாளர் எம்.எஸ். தரணிவேந்தன் ஆகியோரை திமுக வேட்பாளர்களாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். இந்தியா கூட்டணியில் போட்டியிடும் தி.மு.க.வேட்பாளர்களின் வெற்றிக்கு வியூகம் வகுத்து தோழமைக் கட்சியினர் அனைவரும் இந்த தேர்தலில் பணியாற்ற வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
திராவிட மாடல் ஆட்சியை நடத்தி லரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றியுள்ள எண்ணற்ற மக்கள் நல திட்டங்களின் பயன்கள் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் சென்று சேர்ந்து இருக்கிறது. கோடிக்கான மக்கள் நேரடியாக பயனடைந்துள்ளனர். எனவே,முதல்வர் நிறைவேற்றியுள்ள திட்டங்களால் திமுக கூட்டணி வேட்பாளர்கள் மகத்தான வெற்றியை பெறுவார்கள். அதற்காக நாம் அனைவரும் இந்த தேர்தலில் அயராது பாடுபட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக திருவண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை பேசியதாவது :- கடந்த 5 ஆண்டுகளாக எதிர்கட்சி வரிசையில் எம்பியாக பணியாற்றினேன். நாடாளுமன்றத்தில் 507 கேள்விகளை எழுப்பி தமிழ்நாட்டிலேயே முதல் இடத்தை பெற்றுள்ளேன். இந்த தொகுதியின் வளர்ச்சிக்காகவும் மக்களின் நலன்களுக்காகவும் பேசியிருக்கிறேன். ஒன்றிய பாஜக அரசு தமிழ்நாட்டிற்காக எதையும் செய்யவில்லை. ஆனாலும் மாற்றுத்திறனாளிகளுக்கான நலத் திட்டங்கள் போன்றவற்றை ஒன்றிய அரசு அதிகாரிகளின் துணையோடு என்னால் செய்ய முடிந்த அளவுக்கு செய்திருக்கிறேன்.
ஒரு ஆளும் கட்சி எம்பி கூட செய்ய முடியாத பணிகளை எதிர்கட்சி எம்பியாக இருந்து செய்திருக்கிறேன். இந்த தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெறும். இந்த முறை என்னை வெற்றி பெற வைத்தால் சிறப்பான எம்பியாக பணியாற்றுவேன். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி,மாநில மருத்துவரணி துணைத் தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன்,எம்எல்ஏ.க்கள் மு.பெ.கிரி, எஸ்.அம்பேத்குமார், பெ.சு.தி.சரவணன், ஒ.ஜோதி, மாவட்ட பொருளாளர் எஸ்.பன்னீர்செல்வம், மாவட்டதுணை செயலாளர் பிரியா விஜயரங்கன், நகர செயலாளர் கார்த்திக்வேல்மாறன், மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் ஷெரீப், மாவட்ட அயலக அமைப்பாளர் சர்தார் காசீம் மற்றும் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், விசிக, மதிமுக, முஸ்லீம் லீக், மக்கள் நீதி மய்யம், தலித் விடுதலை இயக்கம், யாதவ மக்கள் கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.
- அ.மு. முஸ்தாக் அகமத்,மாவட்ட செய்தியாளர்,திருவண்ணாமலை.
No comments:
Post a Comment