திருவண்ணாமலை மாவட்டத்தில் ரூ.450 கோடியில் வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்த அரசுக்கு பரிந்துரைக்கப்படும், சட்டமன்ற மதிப்பீட்டுக்குழு தலைவர் தகவல். - தமிழக குரல் - திருவண்ணாமலை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 1 March 2024

திருவண்ணாமலை மாவட்டத்தில் ரூ.450 கோடியில் வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்த அரசுக்கு பரிந்துரைக்கப்படும், சட்டமன்ற மதிப்பீட்டுக்குழு தலைவர் தகவல்.


திருவண்ணாமலை மாவட்டத்தில், ரூ.450 கோடியில் வளர்ச்சித் திட்டப்பணிகள் நிறைவேற்ற அரசுக்கு பரிந்துரைக்கப்படும் என சட்டமன்ற மதிப்பீட்டுக்குழு தலைவர் அன்பழகன் தெரிவித்தார்.


திருவண்ணாமலை மாவட்டத்தில் சட்டமன்ற மதிப்பீட்டுக் குழுவின் தலைவர் கே.அன்பழகன் தலைமையிலான குழுவினர் 29-2-24 அன்று ஆய்வு செய்தனர், அதன்படி ஆரணி சூரிய குளம் சீரமைப்பு பணி, கலசப்பாக்கம் அருகே அருணகிரி மங்கலம் பகுதியில் சமுதாய கூடம் கட்டும் பணி, திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரியில் சீமாங் புதிய கட்டிடம் கட்டுமான பணி, கலெக்டர் அலுவலகத்தில் புதிய கூட்ட அரங்கம் கட்டுதல், அரசு கல்லூரி மாணவிகள் விடுதி, நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி புதிய கட்டிடம் கட்டுதல் உள்ளிட்ட பணிகளை குழு ஆய்வு செய்தது.             


அதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலர்களுடான ஆய்வுக் கூட்டம் நடந்தது. குழுவின் தலைவர் கே.அன்பழகன் தலைமை தாங்கினார். கலெக்டர் பாஸ்கர பாண்டியன், துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, எம்எல்ஏ.க்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், ஓ.ஜோதி,சேவூர் எஸ்.ராமச்சந்திரன், சிந்தனைச்செல்வன், சிவக்குமார், பரந்தாமன், பூமிநாதன் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், கூடுதல் கலெக்டர் ரிஷப் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.


அதனைத் தொடர்ந்து குழு தலைவர் அன்பழகன் கூறியதாவது, தமிழ்நாடு முதல்வர் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். அதன் மூலம் ஏராளமானோர் பயன் பெற்றுள்ளனர். அதற்காக முதல்வருக்கு குழு நன்றி தெரிவிக்கிறது. ஆன்மீக நகரமான திருவண்ணாமலையின் வளர்ச்சிக்கு பொதுப்பணித் துறை அமைச்சர் பல்வேறு பணிகளை நிறைவேற்றி வருகிறார், இவ்வாறு அவர் தெரிவித்தார்.      


- அ.மு. முஸ்தாக் அகமத்,மாவட்ட செய்தியாளர்,திருவண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad