திருவண்ணாமலை நகராட்சியில் தூய்மை பணி மாவட்ட ஆட்சியர் நேரடி ஆய்வு. - தமிழக குரல் - திருவண்ணாமலை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday 13 February 2024

திருவண்ணாமலை நகராட்சியில் தூய்மை பணி மாவட்ட ஆட்சியர் நேரடி ஆய்வு.


திருவண்ணாமலை நகராட்சி வார்டு எண் 12ல் நடைபெறும் தூய்மை பணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் பாஸ்கர பாண்டியன்,இ.ஆ.ப. இன்று (13-2-24) ஆய்வு செய்தார்.                

திருவண்ணாமலை மாவட்டத்தில் நான்கு நகராட்சி,10 பேருராட்சிகளில் 860 ஊராட்சிகளில் தினந்தோறும் வீடுகளில் கிடைக்கும் மக்கும் குப்பை,மக்காத குப்பை சேகரிக்கும் பணியினை தூய்மை பணியாளர்கள் மேற்கொண்டு வருகிறார்கள். திருவண்ணாமலை நகராட்சியில் 39 வார்டுகள் உள்ளன. மக்கள் தொகை 1 லட்சத்தி 65 ஆயிரம். இதன் சுற்றளவு 13.64 கி.மீ. நாள் தோறும் 24 லாரி (இலகு, கனரக) மற்றும் 60 பேட்டரி வண்டிகள் மூலம் 254 ஒப்பந்த பணியாளர்கள் மற்றும் 55 நிரந்தர துப்புரவு பணியாளர்கள் கொண்டு தினந்தோறும் மக்கும் குப்பை 35 டன் மக்காத குப்பை  20 டன் சேகரிக்கப்பட்டு குப்பை கிடங்கில் சேர்க்கப்படுவதை 10 மேற்பார்வையாளர்கள்13 தற்காலிக மேற்பார்வையாளர்கள் மூலம் பணிகள் நடைபெறுகிறது.


13-2-24 இன்று திருவண்ணாமலை நகராட்சியில் வார்டு எண் 12ல்  மாவட்ட ஆட்சித் தலைவர் பாஸ்கர பாண்டியன், இ.ஆ.ப.வீடு வீடாக  பார்வையிட்டு, மக்கும் குப்பை மக்காத குப்பை தரம் பிரித்து தர வேண்டுகோள் விடுத்தார். இந்த ஆய்வின் போது DRO டாக்டர் மு.பிரியதர்ஷினி, RDO மந்தாகினி, நகராட்சி ஆணையர் வசந்தி, துணை சேர்மன் ராஜாங்கம், சுகாதார அலுவலர் செல்வராஜ்,சுகாதார ஆய்வாளர் பாலமுருகன் மற்றும் அரசு அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள் உடனிருந்தனர்.                         


- அ.மு.முஸ்தாக் அகமத், மாவட்ட செய்தியாளர், திருவண்ணாமலை.

No comments:

Post a Comment

Post Top Ad