மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில்,தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்தார். - தமிழக குரல் - திருவண்ணாமலை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday 13 February 2024

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில்,தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்தார்.


திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் மாதந்தோறும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகின்றது. அதன் மூலம் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.      
           

கடந்த ஆண்டில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் அருணை பொறியியல் கல்லூரி வளாகத்தில் கலைஞர் நூற்றாண்டு விழா முன்னிட்டு நடத்திய வேலை வாய்ப்பு முகாமில் 253 நபர்களுக்கு முன்னணி நிறுவனங்களில் வேலை வழங்கப்பட்டது. அதேபோல் செய்யாறு அரசு தொழில்நுட்பக் கல்லூரி நடந்த வேலை வாய்ப்பு முகாமில் 102 நிறுவனங்கள் கலந்துக்கொண்டன. இதில் 549 நபர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டன. 


இந்நிலையில் திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரியில் வரும் 17ந் தேதி காலை 9 மணி அளவில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாமில் 100க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் கலந்துக்கொண்டு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கு நேர்மூகத் தேர்வை நடத்த உள்ளன. அதோடு வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கு பதிவு வழிகாட்டுதல்கள், இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான பதிவுகள் நடைபெற உள்ளது. 


இம்முகாமில் ஆண்கள் பெண்கள் கலந்துக்கொள்ளலாம். 

  • 8ம் வகுப்பு தேர்ச்சி முதல் ஐடிஐ, டிப்ளமோ, பிளஸ் 2, பட்டப்படிப்பு, முதுநிலை பட்டப்படிப்பு உள்ளிட்ட கல்வித் தகுதியுள்ள அனைவரும் கலந்துக் கொள்ளலாம்.               
  • வேலைவாய்ப்பு முகாமில் கலந்துக்கொள்ள விருப்பம் உள்ளவர்கள், புகைப்படம், கல்விச்சான்று, ஆதார் அட்டை மற்றும் சுய விவரக் குறிப்புகளுடன் நேரில் கலந்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.                                     


இந்நிலையில் தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் குறித்து அறிந்துக்கொள்ள வேலை வாய்ப்பு துறை இணையத்தளத்தில் வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான விழிப்புணர்வு பிரசார வாகனம் 12-2-24 அன்று கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கப்பட்டது. இந்த வாகனத்தை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். 

இதில் DRO பிரியதர்ஷினி,மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் யோகலட்சுமி, இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர் வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.                 


- அ.மு.முஸ்தாக் அகமத்,மாவட்ட செய்தியாளர்,திருவண்ணாமலை.

No comments:

Post a Comment

Post Top Ad