திருவண்ணாமலையில் தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் ஆட்சி மொழி பயிற்சி முகாம்,கருத்தரங்கம், மாணவர்களுக்கு கலெக்டர் பரிசு வழங்கினார். - தமிழக குரல் - திருவண்ணாமலை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday 15 February 2024

திருவண்ணாமலையில் தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் ஆட்சி மொழி பயிற்சி முகாம்,கருத்தரங்கம், மாணவர்களுக்கு கலெக்டர் பரிசு வழங்கினார்.


தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஆட்சி மொழி பயிற்சி முகாம் மற்றும் கருத்தரங்கம் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் 13 & 14 தேதிகளில் நடந்தது, முதல் நாள் நிகழ்ச்சியில், உதவி பேராசிரியர் சு.பிரேம்குமார், முதுகலை தமிழாசிரியர் சு.வேலாயுதம், முன்னாள் தமிழ் வளர்ச்சி துணை இயக்குநர் க.சிவகாமி, நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் சென்னம்மாள், தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் ஜெயஜோதி ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் பயிற்சி அளித்தனர்.        
      

அதனை தொடர்ந்து 14ந் தேதி நடந்த 2ம் நாள் நிகழ்ச்சியில் தமிழாசிரியர் சபரி, ஆசிரியர் முத்தமிழன்,சையத் அஜ்மல், பேராசிரியர்கள் சங்கர், லட்சுமி ஆகியோர் பயிற்சி அளித்தனர். கருத்தரங்கின் நிறைவு நிகழ்ச்சி 14-2-24 மாலை நடந்தது. அப்போது கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பரிசு வழங்கி பாராட்டினார்.        

மேலும் மொழி போராட்டங்களில் பங்கேற்ற தமிழறிஞர்கள் 5 பேருக்கு தலா 10 ஆயிரம் மற்றும் உதவித்தொகைக்கான ஆணைகளையும் வழங்கினார். மேலும் குறள் பரிசு திட்டத்தின் கீழ் 1330 திருக்குறள்களையும் முற்றோதல் செய்த 8 மாணவர்களுக்கு தலா ரூ.15 ஆயிரம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களையும், அரசு அலுவலகங்களில் ஆட்சிமொழி திட்டச் செயற்பாட்டின் ஒரு பகுதியாக தமிழில் சிறந்த குறிப்புகள், வரைவுகள் எழுதும் மாவட்ட நிலை, சார் நிலை, உள்ளாட்சி தன்னாட்சி நிறுவன அலுவலகப் பணியாளர்களுக்கு பரிசு வழங்கும் திட்டத்தின் கீழ் 2021ம் ஆண்டுக்கான சிறந்த குறிப்புகள் வரைவுகள் எழுதிய 3 அரசுப் பணியாளர்களுக்கு ரொக்கப் பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.                   


காந்தியடிகள் பிறந்த நாள் பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற 8 மாணவர்களுக்கும், ஜவஹர்லால் நேரு பிறந்த நாள் பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற 8 மாணவர்களுக்கும் ரொக்கப் பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும் திருவண்ணாமலை மாவட்ட அளவிலான பள்ளி மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற 9 மாணவர்கள், கல்லூரி மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ரொக்கப் பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.                 


இந்நிகழ்ச்சியில் எக்ஸ்னோரா இந்திரராசன்,திருக்குறள் தொண்டு மையத் தலைவர் குப்பன், புத்தக பதிப்பாளர் சண்முகம்  உள்பட பலர் கலந்துக் கொண்டனர்.                


- அ.மு. முஸ்தாக் அகமத்,மாவட்ட செய்தியாளர்,திருவண்ணாமலை.

No comments:

Post a Comment

Post Top Ad