கருணாநிதி நூற்றாண்டு நினைவு கைத்தறி பட்டு பூங்கா அமைப்பது தொடர்பாக ஆலோசனை கூட்டம், கலெக்டர் தலைமையில் நடந்தது. - தமிழக குரல் - திருவண்ணாமலை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 20 February 2024

கருணாநிதி நூற்றாண்டு நினைவு கைத்தறி பட்டு பூங்கா அமைப்பது தொடர்பாக ஆலோசனை கூட்டம், கலெக்டர் தலைமையில் நடந்தது.


திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தாலூகா, பெரியண்ணநல்லூர் கிராமத்தில் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு நினைவு கைத்தறி பட்டு பூங்கா அமைப்பது தொடர்பாக 19-2-24 அன்று கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் துறை சார்ந்த அலுவலர்களுடான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார்.இதில் கைத்தறி பட்டுப் பூங்கா அமைப்பது தொடர்பாக தொடர்புடைய பிற துறைகளிடமிருந்து தடையின்மை சான்று ஒற்றை சாளர முறையில் பெறுவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.       

கூட்டத்தில் காணொளி காட்சி மூலமாக அலுவலர்களுக்கு கைத்தறி ஆணையர் பல்வேறு ஆலோசனை வழங்கி பேசினார். கூட்டத்தில் கைத்தறி உதவி இய்க்குநர் மணி முத்து,வேளாண்மை இயக்குநர் அரக்குமார் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.                                   


- அ.மு.முஸ்தாக் அகமத், மாவட்ட செய்தியாளர், திருவண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad