செங்கம் அருகே 23 பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டா வழங்கும் இடத்தை கோட்டாட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்தார். - தமிழக குரல் - திருவண்ணாமலை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday 22 February 2024

செங்கம் அருகே 23 பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டா வழங்கும் இடத்தை கோட்டாட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.


திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த முன்னூர்மங்களம் ஊராட்சியில் 23 பயனாளிகளுக்கு இலவச மனைப்பட்டா வழங்க இடத்தை வருவாய்க் கோட்டாட்சியா் மந்தாகினி அவர்கள் புதன்கிழமை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டாா்.

செங்கம் அடுத்த கலசப்பாக்கம் தொகுதிக்கு உள்பட்ட முன்னூா்மங்கலம் கிராமத்தில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடி சமுதாயத்தைச் சேர்ந்த 23 குடும்பங்கள், அரசு புறம்போக்கு நிலத்தில் கூரை வீடுகள் கட்டி பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனா். அவா்களுக்கு தமிழக அரசு மூலம் இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க திருவண்ணாமலை கோட்டாட்சியா் மந்தாகினி புதன்கிழமை இடத்தை நேரில் சென்று பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, ஒரு குடும்பத்துக்கு எத்தனை பேர் இருக்கிறார்கள், எத்தனை ஆண்டுகளாக அங்கு வசித்து வருகின்றனா் என ஆய்வு செய்தார் .அங்கு அரசுக்குச் சொந்தமான நிலம் எவ்வளவு உள்ளது என்பது குறித்து மேற்ப்பாா்வையிட்டாா். 


பின்னா், இதுகுறித்த விவரங்களை வட்டாட்சியா் முருகன் மற்றும் நில அளவைப் பிரிவு அலுவலா்களிடம் கேட்டறிந்தாா். இதைத் தொடா்ந்து, அந்த 23 பயனாளிகளுக்கு விரைவில் இலவச மனைப் பட்டா வழங்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுத்து வருவதாக அப்பகுதி மக்களுக்கு தகவல் தெரிவித்தார் .உடன் ஊராட்சி மன்ற தலைவா் மகேஸ்வரிசுதாகா், புதுப்பாளையம் வருவாய் ஆய்வாளா் சாம்பவி, கிராம நிா்வாக அலுவலா் அப்பா்சாமி உள்ளிட்ட வருவாய்த் துறையினா் உடனிருந்தனா்.


- தமிழக குரல் செய்திகளுக்காக செங்கம் செய்தியாளர் TR.கலையரசு (Cell:8678944230) 

No comments:

Post a Comment

Post Top Ad