திருவண்ணாமலை மாவட்டத்திலேயே மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாக விளங்குவது சாத்தனூர் அணையாகும். பொன்விழா கண்ட இந்த அணை 119 அடி உயரம் கொண்டது. பரவலாக மழை பெய்தால் சாத்தனூர் அணை 118 அடி நீர்மட்டம் உயரும். இந்நிலையில், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட மக்கள் விவசாய பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கோரிக்கை வைத்ததால் கடந்த மாத 11ம் தேதி சாத்தனூர் அணையில் இருந்து வலது, இடது தென்பெண்ணை ஆற்றில் வினாடிக்கு 530 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
இதனால் சாத்தனூர் அணையின் நீர்மட்டம் நேற்று 111.80 அடியாக குறைந்துள்ளது. நேற்று விடுமுறை, முகூர்த்த தினம் என்பதால் சாத்தனூர் அணைக்கு குறைந்த அளவே சுற்றுலா பயணிகள் வந்தனர். மேலும், சாத்தனூர் அணையில் இருந்து திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களின் விவசாய பாசனத்திற்காக கால்வாயில் திறந்து விடப்பட்ட தண்ணீரில் பொதுமக்கள் குளித்து மகிழ்ந்தனர்.
- தமிழக குரல் செய்திகளுக்காக செங்கம் -செய்தியாளர் கலையரசு

No comments:
Post a Comment