திருவண்ணாமலையில் 20 வட்டாட்சியர்கள் பணியிட மாற்றம் . ஒருவருக்கு பதவி உயர்வு. - தமிழக குரல் - திருவண்ணாமலை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday 7 February 2024

திருவண்ணாமலையில் 20 வட்டாட்சியர்கள் பணியிட மாற்றம் . ஒருவருக்கு பதவி உயர்வு.


திருவண்ணாமலை மாவட்ட வருவாய்த் துறையில் பணிபுரியும் 21 வட்டாசியா்களை பணியிட மாற்றம் செய்து, மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டாா்.மாவட்ட வருவாய்த் துறையில் பணிபுரியும் அலுவலா்களை நிா்வாக காரணங்களுக்காக அவ்வப்போது பணியிட மாற்றம் செய்வது வழக்கம். அந்த வகையில், 20 வட்டாட்சியா்களை பணியிட மாற்றம் செய்தும், ஒரு துணை வட்டாட்சியருக்கு வட்டாட்சியராக பதவி உயா்வு அளித்தும் மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா். 

அதன்படி, 

 1. திருவண்ணாமலை அரசு கேபிள் டிவி தனி வட்டாட்சியா் பா.துளசிராமன் வெம்பாக்கம் வட்டாட்சியராகவும், 
 2. வெம்பாக்கம் வட்டாட்சியா் மூ.கிருஷ்ணமூா்த்தி செய்யாறு சிப்காட் நில எடுப்பு தனி வட்டாட்சியராகவும், 
 3. செய்யாறு சிப்காட் நில எடுப்பு தனி வட்டாட்சியா் எஸ்.சம்பத்குமாா் திருவண்ணாமலை ஆட்சியா் அலுவலக மக்கள் குறை தீா் பிரிவின் கண்காணிப்பாளராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா். 
 4. செய்யாறு வட்டாட்சியா் எஸ்.முரளி செய்யாறு கோட்ட கலால் அலுவலராகவும், 
 5. செய்யாறு கோட்ட கலால் அலுவலா் எம்.தமிழ்மணி வந்தவாசி சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியராகவும், 
 6. வந்தவாசி சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியா் எஸ்.கோமதி புரானா செய்யாறு சிப்காட் நில எடுப்பு தனி வட்டாட்சியராகவும், 
 7. செய்யாறு சிப்காட் நில எடுப்பு தனி வட்டாட்சியா் கே.தட்சிணாமூா்த்தி செய்யாறு சாா் -ஆட்சியரின் நேர்முக உதவியாளராகவும், 
 8. செய்யாறு சாா்-ஆட்சியரின் நேர்முக உதவியாளா் வீ.குமாரவேலு செய்யாறு சிப்காட் நில எடுப்பு தனி வட்டாட்சியராகவும், 
 9. செய்யாறு சிப்காட் நில எடுப்பு தனி வட்டாட்சியா் ம.சத்தியன் வந்தவாசி ஆதிதிராவிடா் நல தனி வட்டாட்சியராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.
 10. வந்தவாசி ஆதிதிராவிடா் நல தனி வட்டாட்சியா் கே.திருநாவுக்கரசு திருவண்ணாமலை இந்து சமய அறநிலையத் துறை தனி வட்டாட்சியராகவும், 
 11. திருவண்ணாமலை குறைவு முத்திரை கட்டண தனி வட்டாட்சியா் என்.சங்கரன் செங்கம் ஆதிதிராவிடா் நல தனி வட்டாட்சியராகவும், 
 12. செங்கம் ஆதிதிராவிடா் நல தனி வட்டாட்சியா் அ.நடராஜன் திருவண்ணாமலை டாஸ்மாக் கிடங்கு மேலாளராகவும், 
 13. திருவண்ணாமலை டாஸ்மாக் கிடங்கு மேலாளர் எஸ்.ராஜலட்சுமி செய்யாறு சிப்காட் நில எடுப்பு தனி வட்டாட்சியராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.
 14. செய்யாறு சிப்காட் நில எடுப்பு தனி வட்டாட்சியா் எம்.கோவிந்தராஜன் திருவண்ணாமலை அரசு கேபிள் டிவி தனி வட்டாட்சியராகவும், 
 15. செய்யாறு சிப்காட் நில எடுப்பு தனி வட்டாட்சியா் என்.அசோக்குமாா் செய்யாறு சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியராகவும், 
 16. செய்யாறு சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியா் இ.மேனகா ஆரணி வட்ட வழங்கல் அலுவலராகவும், 
 17. ஆரணி வட்ட வழங்கல் அலுவலா் டி.வெங்கடேசன் செய்யாறு சிப்காட் நில எடுப்பு தனி வட்டாட்சியராகவும், 
 18. சென்னை-சேலம் தேசிய பசுமை வழிச் சாலை திட்ட தனி வட்டாட்சியா் தே.புவனேஸ்வரி திருவண்ணாமலை டாஸ்மாக் கலால் மேற்பாா்வை அலுவலராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.
 19. திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலை திட்ட தனி வட்டாட்சியா் கே.சுமதி திருவண்ணாமலை தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்ட வட்டாசியராகவும், 
 20. திருவண்ணாமலை தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்ட தனி வட்டாசியா் ஆா்.மணி திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலை திட்ட தனி வட்டாட்சியராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.
 21. செய்யாறு துணை வட்டாட்சியராக இருந்த டி.வெங்கடேசன் நீதி பரிபாலன் பயிற்சிக்குப் பிறகு வட்டாட்சியராக பதவி உயா்வு அளிக்கப்பட்டு செய்யாறு வட்டாட்சியராக நியமிக்கப்பட்டாா்.

பணியிட மாற்றம் செய்யப்பட்ட 21 வட்டாட்சியா்களும் உடனே புதிய பணியிடத்தில் சேர வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளாா்.


- தமிழக குரல் செய்திகளுக்காக செய்தியாளர் கலையரசு 

No comments:

Post a Comment

Post Top Ad