பேரறிஞர் அண்ணா நினைவு நாளையொட்டி திருவண்ணாமலையில் நகர தி.மு.க.சார்பில் இன்று அமைதி ஊர்வலம். - தமிழக குரல் - திருவண்ணாமலை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday 3 February 2024

பேரறிஞர் அண்ணா நினைவு நாளையொட்டி திருவண்ணாமலையில் நகர தி.மு.க.சார்பில் இன்று அமைதி ஊர்வலம்.


பேரறிஞர் அண்ணா நினைவு நாளையொட்டி திருவண்ணாமலையில் நகர தி.மு.க.சார்பில் இன்று 03-02-24 அமைதி ஊர்வலம் தி.மு.க. மாநில மருத்துவர் அணி துணை தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன் தலைமையில் நடந்தது. அமைதி ஊர்வலத்தில் மாவட்ட அவை தலைவர் த.வேணுகோபால், நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.ஸ்ரீதரன், தி.மு.க.பொறியாளர் அணி செயலாளர் கு.கருணாநிதி, தலைமை செயற்குழு உறுப்பினர் பொன்முத்து, எம்.எல்.ஏ.க்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், மாவட்ட பொருளாளர் எஸ்.பன்னீர்செல்வம், மாவட்ட துணை செயலாளர் பிரியா விஜயரங்கன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

அமைதி ஊர்வலத்தில் அயலக அணி மாவட்ட அமைப்பாளர் எ.டபிள்யு.சர்தார் காசீம் உள்பட மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகளும் அணி சார்ந்த அமைப்பின் நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் பெரும் திரளாக கலந்துக்கொண்டனர். ஏற்பாட்டினை நகர செயலாளர் ப.கார்த்திக்வேல்மாறன் செய்தார்.                                          


- அ.மு.முஸ்தாக் அகமத், மாவட்ட செய்தியாளர், திருவண்ணாமலை.

No comments:

Post a Comment

Post Top Ad