செங்கத்தில் மக்கள் வெள்ளத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை. - தமிழக குரல் - திருவண்ணாமலை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday 31 January 2024

செங்கத்தில் மக்கள் வெள்ளத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.


தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் நடைபயணம் பெரும் எதிர்பார்ப்பை ஒவ்வொரு மாவட்டங்களிலும் ஏற்படுத்தி வருகிறது. மாவட்டந்தோறும், சாலையின் வழியெங்கும் அண்ணாமலைக்கு சிறப்பான முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டு வரும் நிலையில் இன்று திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சட்ட மன்ற தொகுதிக்கு வருகை தந்த அண்ணாமலை செங்கம் மில்லத்நகர் பகுதியில் ஸ்ரீ திரௌபதி அம்மன் திருக்கோவிலில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டு பின்னர் செங்கம் ரவுண்டனாவில் இருந்து தொடங்கி புதிய பேருந்து நிலையம் வரை நடைப்பயணமாக சென்றார். 

இதில் வழிநெடுக மேளதாளங்களுடன் மலர்களை தூவி வரவேற்றனர்.இதில் ஏராளமான பாஜக கட்சி நிர்வாகிகள், இளைஞர்கள், பெண்கள், தொண்டர்கள் என பலர் சூழ்ந்து  மக்கள் வெள்ளத்தில் திகழ்ந்தார் அண்ணாமலை.


- செங்கம் செய்தியாளர் கலையரசு 

No comments:

Post a Comment

Post Top Ad