ஸ்ரீ பாரதி காலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வாக்காளர் உறுதிமொழி ஏற்பு நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. - தமிழக குரல் - திருவண்ணாமலை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday 23 January 2024

ஸ்ரீ பாரதி காலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வாக்காளர் உறுதிமொழி ஏற்பு நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.


இந்திய தேர்தல் ஆணையம் 14 ஆவது தேசிய வாக்காளர் தினம் முன்னிட்டு குன்னத்தூர் ஸ்ரீ பாரதி காலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வாக்காளர் உறுதிமொழி ஏற்பு நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் வருவாய் கோட்டாட்சியர் திருமதி.தனலட்சுமி,  வட்டாட்சியர்  திருமதி.மஞ்சுளா, தேர்தல் உதவி வட்டாட்சியர் திரு. சுகுமார்  தேர்தல்  பிரிவு அதிகாரிகள், கிராம நிர்வாக அலுவலர் கல்லூரியின் முதல்வர் முனைவர்.இரா.தர்மராஜ்,  துணைத்தலைவர்கள்,இருபால் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கு பெற்றனர். குன்னத்தூர் ஸ்ரீ பாரதி காலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சுமார் 169 மாணவர்கள் நடப்பாண்டில் முதல் வாக்காளராக இணைத்துள்ளனர், அவர்கள் அனைவரும் வாக்காளர் விழிப்புணர்வு உறுதி மொழியை ஏற்றுக்கொண்டனர்.


வாக்காளர் விழிப்புணர்வு குறித்து திருவண்ணாமலை மாவட்ட அளவில் மிக சிறப்பாக பங்காற்றியமைக்காக எமது கல்லூரி மாவட்ட அளவில் முதன்மை கல்லூரியாக தெரிவு செய்யப்பட்டு நாளை தினம் 25.01.2024 சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறவுள்ள 14 வது தேசிய வாக்காளர் தினம்  நிகழ்வில் தமிழக ஆளுநர் மாண்புமிகு ஆர். என்.ரவி அவர்களின் திருக்கரங்களால் பாராட்டு சான்றிதழ் விருதினையும் கல்லூரி முதல்வர் பெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad